யுரேனியம் ஆக்சைடு
யுரேனியம் ஆக்சைடு (Uranium oxide) என்பது யுரேனியம் தனிமத்தின் ஆக்சைடு சேர்மங்களைக் குறிக்கும்.
யுரேனியம் தனிமம் பலவகையான ஆக்சைடுகளாக உருவாகிறது.
யுரேனியம் ஈராக்சைடு அல்லது யுரேனியம்(IV) ஆக்சைடு - UO2 இதனுடைய தாதுப் பொருள் யுரேனைட்டு அல்லது பிட்ச் பிளெண்ட்டு ஆகும்.
யுரேனியம் மூவாக்சைடு அல்லது யுரேனியம்(VI) ஆக்சைடு - UO3
மூன்றுயுரேனியம் எண்ணாக்சைடு - U3O8 அதிக நிலைப்புத்தன்மை கொண்ட யுரேனியம் ஆக்சைடு இதுவாகும். மஞ்சள்நிற அப்பமாக உள்ள இவ்வாக்சைடில் 70 முதல் 90 சதம் மூன்றுயுரேனியம் எண்ணாக்சைடு நிறைந்துள்ளது.
யுரேனைல் பெராக்சைடு - UO2O2 அல்லது UO4
யுரேனியம் ஈராக்சைடு ஆக்சிசனுடன் தொடர்பு கொள்ள நேரும் போது ஆக்சிசனேற்றம் அடைந்து மூன்றுயுரேனியம் எண்ணாக்சைடாக உருவாகிறது.
3 UO2 + O2 → U3O8; at 700 °C (970 K)
38 தயாரிப்பு
தொகுஇரண்டாம் உலகப் போரின் போது யுரேனியம் ஆக்சைடு தயாரிப்பை “38 தயாரிப்பு” என்ற குறிப்பெயரை செருமன் விஞ்ஞானிகள் உபயோகித்தனர்.[1] [2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Per F. Dahl, Heavy water and the wartime race for nuclear energy (Institute of Physics Publishing, London 1999), p. 135
- ↑ "Uranium Oxide International Bio-Analytical Industries, Inc". Archived from the original on 2013-01-18. பார்க்கப்பட்ட நாள் 2015-10-01.
- ↑ Geoffrey Brooks (1992). Hitler's Nuclear Weapons. p. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780850523447.