யு வடிவ பள்ளத்தாக்கு
U வடிவ பள்ளத்தாக்கு (U-shaped valley) என்பது ஒரு பள்ளத்தாக்கு வகையாகும். இவை மலையில் இருந்து உருவான பனியாறுகளோடு தொடர்புடைய நிலத்தோற்றங்களுள் ஒன்று ஆகும்.[1] நில அமைப்பானது பனியாற்றினால் அரிக்கப்பட்டு ஆழப்படுத்தப்படுவதால் உருவாகும் பள்ளத்தாக்கு நிலத்தோற்றமே இவை ஆகும். இவை முதலில் 'V' வடிவ பள்ளதாக்காக உள்ளன ஆனால் நாளாவட்டத்தில் மேலும் மேலும் பனியாற்றினால் ஆழப்படுத்தப்பட்டு அகலப்படுத்தப்படுவதினால் இந்த U வடிவ பள்ளத்தாக்கு உருவாகின்றது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "glacial valley | geological formation" (in en). Encyclopedia Britannica. https://www.britannica.com/science/glacial-valley.
- ↑ தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்பு 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 267.