யூகலிப்டசு தேன்

யூகலிப்டசு தேன் (Eucalyptus honey) என்பது யூகலிப்டசு மரங்களிலிருந்து தேனீக்களால் தயாரிக்கப்படும் ஒரு வகை தேன் ஆகும்.

யூகலிப்டஸ் தேன்

ஆத்திரேலியா, தென்னாப்பிரிக்காவின் மேற்கு கேப் மற்றும் பிரேசிலில் இது பொதுவானது. ஆனால் பல வகையான யூகலிப்டசு தேன் வெப்பமண்டலத்திலிருந்து மிதமான பகுதிகள் வரை உலகம் முழுவதும் காணப்படும் மரங்களிலிருந்து பெறப்படுகிறது.[1] அமெரிக்க ஐக்கிய நாடுகளில், இது கலிபோர்னியாவில் இருந்து வருகிறது. இங்கு யூகலிப்டசு தாவரத்தின் 500க்கும் மேற்பட்ட வெவ்வேறு துணையினங்கள் வளர்க்கப்படுகின்றன.[1]

ஒற்றை மலர்த் தேனான யூகலிப்டசு தேன்களில் ஜர்ரா, மஞ்சள் பெட்டி, சாம்பல் பெட்டி, நீலப் பசை, ஆற்றுச் சிவப்பு பசை, அயர்ன்பார்க், இசுட்ரிங்கிபார்க் மற்றும் மெசுமேட் ஆகிய வணிகப்பெயரில் கிடைக்கின்றன.

வகைகள் தொகு

யூகலிப்டசு தேன் நிறம் மற்றும் சுவையில் பெரிதும் மாறுபடுகிறது. ஆனால் பொதுவாக, இது புளிப்பு முதல் இனிப்பு சுவை வரை இருக்கும்.[1] மருத்துவ குணம் கொண்ட தேனாக இது இருக்கும். இதன் நிறம் வெளிர் அம்பர் முதல் நடுத்தர அடர் சிவப்பு வரை இருக்கும்.[1] இது வேகவைத்த பொருட்கள், சுவைச்சாறு, பனிக்கூழ் ஆகியவற்றில் பயன்படுத்தப்படலாம். ஆனால் சேகரித்தவாறு, வடிகட்டாமல் சூடாக்காமல் சாப்பிடுவது சிறந்தது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "What Is Eucalyptus Honey? | How Is It Produced & Benefits" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2020-06-08. பார்க்கப்பட்ட நாள் 2023-06-21.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூகலிப்டசு_தேன்&oldid=3771793" இலிருந்து மீள்விக்கப்பட்டது