யூகின் மெல்ச்சியர் பெலிகாட்

யூகின் பெலிகாட் அல்லது யூகின் மெல்ச்சியர் பெலிகாட் (Eugène-Melchior Péligot: 1811,பாரிஸ்[1] - 1890,பாரிஸ் [1]); பிரெஞ்சு வேதியலாளர்; 1841 இல் யுரேனியம் என்ற தனிமத்தை முதன் முதலில் தனிமைப்படுத்திக் கண்டறிந்தவர்.[1] மார்ட்டின் ஹென்ரிச் க்ளாப்ராத் என்பவர் கண்டறிந்த கருந்தூள் (black powder) உணமையில் தூய தனிமம் அல்லவென்றும் அது யுரேனியத்தின் ஓர் ஆக்சைடு என்பதைக் கண்டறிந்து கூறினார்.பொட்டாசியம் உலோகத்தில் கூட்டாக உள்ள யுரேனியம் டெட்ராக்சைடை பிரிந்த்தெடுப்பதிலும் வெற்றி கண்டார்.[2] தற்காலத்தில் யுரேனியம் பிரித்தெடுப்பதில் பல நவீன முறைகள் கண்டறியப்பட்டுள்ளன.[3] பெலிகாட் உப்பு இவரால் பெயர் பெற்றதாகும்.

யூகின் மெல்ச்சியர் பெலிகாட்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 http://www.epa.gov/radiation/radionuclides/uranium.html
  2. "Celestial Bodies". Archived from the original on 2002-02-20. பார்க்கப்பட்ட நாள் 2002-02-20.
  3. Uranium - LoveToKnow 1911