யூனிசு டி சூசா
யூனிசு டி சூசா (Eunice de Sousa 1940 -2017) என்பவர் இந்திய ஆங்கிலப் பெண் எழுத்தாளர் ஆவார். ஆங்கிலக் கவிஞர், புதின ஆசிரியர், இலக்கியத் திறனாய்வாளர் எனவும் மதிக்கப்பட்டவர்.
பிறப்பும் படிப்பும்
தொகுபுனே நகரில் பிறந்து வளர்ந்த யூனிசு டி சோசா கோவன் கத்தோலிக்க மரபைச் சேர்ந்தவர். [1]அமெரிக்காவின் வின்கான்சின் மார்க்கட் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்தார். மும்பை பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
பணிகள்
தொகுமும்பையில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் ஆசிரியர் பணியில் சேர்ந்து ஆங்கிலம் கற்பித்தார். ஒய்வு பெறும் காலம் வரை அந்தக் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராக இருந்தார். கல்லூரியில் இலக்கியத் திருவிழா ஆண்டுதோறும் நடத்தினார். நாடகங்களில் இயக்குநராகவும் நடிகையாகவும் பங்களித்தார்.2001 இல் புதினங்கள் எழுதத் தொடங்கினார். குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதினார். மும்பை மிர்ரர் இதழில் கட்டுரைகள் எழுதி வந்தார். [2] பழம் நூல்களைத் தொகுப்பதிலும் ஆர்வம் காட்டினார். 2017 சூலைத் திங்கள் 29 இல் காலமானார்.
படைப்புகள்
தொகுகவிதைகள்
தொகு- பிக்ஸ் (1979)
- விம்மென் இன் டச் பெயின்டிங் (1988)
- வேஸ் ஆப் பிளாங்கிங் (1990)
- செலெக்டட் அண்ட் நியூ போயம்ஸ் (1994)
புதினங்கள்
தொகு- டேஞ்சர்லோக் (2001)
- தேவ் அண்ட் சிம்ரன் (2003)
பிற ஆக்கங்கள்
தொகு- இந்தியக் கவிஞர்களுடன் உரையாடல்கள் (2001)
- இந்திய பெண் கவிஞர்கள்:ஒரு தொகுப்பு (2001)
- பர்தா --ஒரு தொகுப்பு
- பெண்களின் குரல்கள் --பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் ஆங்கில எழுத்தாக்கங்கள்
- இந்திய ஆங்கில கவிதைகள் :தொகுப்பு 1829 முதல் 1947 வரை
- சத்தியநாதன் குடும்ப ஆல்பம்.
மேற்கோள்
தொகு- ↑ Eunice De Souza (Arlindo Correia's Home Page) Accessed: 20 January 2007.
- ↑ http://mumbaimirror.indiatimes.com/columns/columnists/eunice-de-souza/call-her-by-my-name/articleshow/59258541.cms