யூபிக்கியுட்டினேற்றம்

யூபிக்கியுட்டினேற்றம் (ubiquitination) அல்லது புரத அழிவு குறியீடு என்பது நிலைகரு உயிர்களில் நடைபெறும் குறிபிட்ட குறியீடுகளால் (signaling) புரத அழிவு நிகழ்வுக்கு வழிகாட்டும் ஒரு குறியீடு ஆகும். இவ்வினையில் புரத அழிவுக்கு ஆயத்தமாகும் புரதங்கள் யுபிகுயிட்டின் என்னும் சிறிய புரதங்களால் புரத அழிவு குறியீடு ஏற்றப்படும். இவ்வினை புரதங்களின் லைசின் என்னும் அமினோ காடியில் நடைபெறும். யுபிகுயிட்டின் 76 அமினோ காடிகளை (ஒவ்வொரு அமினோ காடியும் தோரயமாக 110 டால்டன் மூலக்கூறு நிறையேய் கொண்டவை) 8.5kD நிறை கொண்ட சிறிய புரதம். யுபிகுயிட்டின் என்னும் சொல் "எல்லா இடங்களிலும் " என்னும் பொருள் தரும் வார்த்தை ஆகும். இவைகள் மாந்த மற்றும் பயிர்களின் எல்லா பாகங்களிலும் நிலையாக வெளிபடுவை ஆகும். மேலும் அனைந்து நிலைகரு உயிர்களில் இப்புரதம் மிகையான ஒற்றுமையேய் கொண்டுள்ளது. இவைகள் நிலையான அளவில் உயிரணுக்களில் வெளிபடுவதால், இவ் மரபணுவின் தொடரியெய் மற்ற மரபணுவை மிகையாக வெளிபடுத்த பயிர்களில் பயன்படுத்தப்படுகிறது.

யூபிக்கியுட்டினேற்றம் அல்லது புரத அழிவு குறியீடு விளக்கும் படம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூபிக்கியுட்டினேற்றம்&oldid=2742774" இலிருந்து மீள்விக்கப்பட்டது