யூபிலி (விவிலியம்)

யூபிலி (Hebrew yovel יובל) ஆண்டு என்பது ஆறு ஆண்டுகளுக்குப்பின் ஒரு ஓய்வின் ஆண்டு என ஏழுமுறை எண்ணிக்கையிட்டு நாற்பத்தொன்பது ஆண்டுகள் கழிந்தப்பின் வரும் ஆண்டு ஆகும். இது விவிலியத்தில் யூதர்கள் இசுரேல் நாட்டில் கடைபிடிக்க வேண்டிய ஒன்றாக மோசே வழியாக கடவுளால் கொடுக்கப்பட்ட சட்டமாக நம்பப்படுகின்றது. லேவியர் நூலில் 25:8-13இல் இது விவரிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டில் நாட்டில் வாழும் அடிமைகள் மற்றும் கைதிகளுக்கு தன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்றும், கடவுளின் இரக்கம் நிறைவாகப் பெறப்படும் ஆண்டாகவும் அது இருக்கும் எனவும் விவிலியம் குறிக்கின்றது.

இம்முறை இன்றும் பல யூதர்களால் சமய வழக்காக இசுரேலில் பின்பற்றப்பட்டாலும், விவிலியத்தில் குறிக்கப்பட்டுள்ள சட்ட விதிமுறைகள் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படுவதில்லை. யூதர்கள் தங்களின் கோத்திரங்களின்படி இசுரேலில் வாழ்ந்தால் மட்டுமே இச்சட்டங்களைக் கடைபிடிக்க இயலும். ஆதலால் சுமார் கி.மு 600இல் ரூபன், காட் மற்றும் மனாசே கோத்திரங்களின் சிறைபிடிப்புக்குப் பின்பு இதனைக் கடைபிடிப்பது இயலாமல் போயிற்று.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Jubilee Year
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூபிலி_(விவிலியம்)&oldid=1837967" இலிருந்து மீள்விக்கப்பட்டது