யூரிசைட்டு
யூரிசைட்டு (Uricite) என்பது C5H4N4O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் மிகவும் அரிய ஒரு கனிமமாகும். யூரிக் அமிலத்தினுடைய கரிமக் கனிம வடிவமாக இது கருதப்படுகிறது. மென்மையான மஞ்சள் கலந்த வெண்மை நிற கனிமமான இது ஒற்றைச் சரிவு படிகத்திட்டத்தில் படிகமாகிறது.
யூரிசைட்டுUricite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | C5H4N4O3 |
இனங்காணல் | |
நிறம் | மஞ்சள் கலந்த வெண்மையாக, நிறமற்றதாக, இலேசான பழுப்பு நிறமாக |
படிக அமைப்பு | ஒற்றைச் சாய்வு |
மோவின் அளவுகோல் வலிமை | 1-2 |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிகசியும் |
ஒப்படர்த்தி | 1.85 (கணக்கிடப்பட்டது) |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு |
மேற்கோள்கள் | [1][2][3] |
கண்டுபிடிப்பும் தோற்றமும்
தொகு1973 ஆம் ஆண்டு மேற்கு ஆத்திரேலியாவின் [1] இயூக்லா பிரதேசத்தில் உள்ள டிங்கோ டோங்கா குகையில் காணப்பட்ட வௌவால் எச்சத்தில் முதன்முதலாக யூரிசைட்டு கண்டுபிடிக்கப்பட்டது. நீரிலி வடிவ யூரிக் அமிலம் இடம்பெற்றிருப்பதால் கனிமத்திற்கு இப்பெயரை சூட்டினார்கள். பைபாசுமாமைட்டு, புருசைட்டு, சிங்கெனைட்டு ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து டிங்கோ டோங்கா குகையில் இது காணப்பட்டது [2].