யோகான் இரிட்டர் வான் அப்போல்சர்

யோகான் இரிட்டர் வான் அப்போல்சர் (Johann Ritter von Oppolzer) (4 ஆகத்து 1808 - 16 ஏப்பிரல் 1871) ஓர் ஆத்திரிய மருத்துவர். இவர் ஆத்திரியப் பேரரசின் புகீமியாவைச் சார்ந்த செசுக்கியே புதேயோவைசு மாவட்டத்தில் உள்ள நோவே கிரேடியில் பிறந்தார். இவர் வானியலாளர் தியோடோர் வான் அப்போல்சரின் (1841–1886) தந்தையார் ஆவார்.

யோகான் இரிட்டர் வான் அப்போல்சர்

இவர் 1835 இல் பிரேகு பல்கலைக்கழகத்தில் மருத்துவ முனைவர் பட்டம் பெற்றார். பிறகு 1841 முதல் பிரேகு பல்கலைக்கழகத்தில் இலிப்சிகிலும் 1848 முதல் இலிப்சிகிலும் 1850 முதல் வியன்னாவிலும் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அங்கு இவர் 1869/61 இல் கல்விக் காப்பாளராகவும் பணிபுரிந்தார். இவர் 1863 இல் சுவீடன் அரசு அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போல்சர் மருதுவம் மேற்கொள்ளும் முன் முழுமையான நோய்நாடலை விரும்பினார். இவர் மூக்கியல் வல்லுநர் ஆடம் பொலிட்சரின் மீது சீரிய தக்கம் செலுத்தியுள்ளார்.

தேர்ந்தெடுத்த எழுத்துகள்

தொகு
  • Vorlesungen über spezielle Pathologie und Therapie, (Lectures on Special Pathology and Therapy); 2 volumes, 1866/1872.

வெளி இணைப்புகள்

தொகு