யோகினி ஏகாதசி

யோகினி ஏகாதசி என்பது ஆடி மாதம் வருகின்ற தேய்பிறை ஏகாதசி நாளாகும். [1] இந்த நாளில் சிவபெருமானை பூசை செய்தால் சரும நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.

தொன்மம்

தொகு

குபேரனின் பணியாட்களில் ஒருவன் ஹேமமாலி. அவனுக்கு குபேரன் சிவபூசைக்காக பூக்களை சேகரிப்பது பணி. ஒருநாள் தன்புதுமனைவி விசாலாட்சியுடன் நேரத்தினை செலவிட்டு, தன்னுடைய பணியை மறந்து போனான். வழக்காக பூசை செய்ய வந்த குபேரன் தனக்கு பூசை செய்ய பூக்கள் இல்லாமைக் கண்டு திகைத்தான். பணியாளின் கவனக்குறைவை எண்ணி கோபம் கொண்டான். அக்கோபத்தில் ஹேமமாலிக்கு கொடிய 18 வகையான சரும நோய்கள் உருவாக சபாமிட்டான். அந்நோய்கள் பற்றிய நிலையில் ஹேமமாலியால் தவந்து செல்லவே முடிந்தது. உடல் வழுவற்று தேகத்தில் பெரும் துன்பம் உண்டானது. இருப்பினும் குபேரனது சிவபூசைக்கு இத்தனை நாள் பூ சேகரித்து தந்த பலனாக அதற்கான தீர்வினை அவன் அறிந்துகொண்டான். மேருமலையில் உள்ள மார்க்கண்டேயரை சந்திந்து தன் நோய் தீர வழிகேட்டான். அவரும் ஆடி மாதம் தேய்பிறை ஏகாதேசியில் விரமிருந்து சிவபெருமானை வணங்கச் சொன்னார். அவ்வாறு வணங்கிய ஹேமமாலிக்கு சரும நோய்கள் அகன்றன. தன் தவறை உணர்ந்தமையால், மீண்டும் குபேரனிடம் சிவபூசைக்கு தேவையான உதவிகள் செய்யும் பணியயாளனானான்.

ஆதாரங்கள்

தொகு
  1. தினமலர் பக்திமலர் 06.08.2015 பக்கம் 10
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகினி_ஏகாதசி&oldid=2097673" இலிருந்து மீள்விக்கப்பட்டது