யோஜனா (மாத இதழ்)
யோஜனா (yojana) என்பது இந்தியாவின் அடித்தட்டு மக்கள் சமூகப் பொருளாதார விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற நோக்கில் வெளிவரும் ஒரு மாத இதழ் ஆகும். 1957 ஆம் ஆண்டு திரு. குஷ்வந்த் சிங் அவர்களைத் தலைமை ஆசிரியராய்க் கொண்டு இவ்விதழ் துவங்கப்பட்டது. தற்போது தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் இவ்விதழ் வெளியாகிறது. தமிழில் இவ்விதழ் திட்டம் என்ற பெயரில் வெளியாகிறது. இந்திய அரசின் உதவி பெற்று வெளியான போதும் இவ்விதழில் நல்ல எண்ணத்துடன் அரசை இடித்துக் கூற வேண்டிய இடத்தில் இடித்துக் கூறுவதும் உண்டு என இவ்விதழின் இணையதளத்தில்[1] கூறப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு