யோன் சிலம்புவே

அருட்திரு. யோன் சிலம்புவே (John Chilembwe, 1871பெப்ரவரி 3, 1915) ஆபிரிக்க விடுதலைப் போராளியும், பாப்திஸ்து சபை போதகரும் ஆவார். இவரது தலைமையில் ஜனவரி 15, 1915 இல் நயாசலாந்தில் வெள்ளையினக் குடியேற்றவாதிகளுக்கு எதிராக இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது மூன்று வெள்ளையர்கள் கொல்லப்பட்டார்கள். இவரது திட்டம் விரிவானதாக இருந்தாலும் வெற்றி பெறவில்லை. இவரும் இவருடன் சென்ற 40 பேரும் கொல்லப்பட்டதுடன் 300 பேர் பிடிபட்டார்கள். குடியேற்றவாத ஆதிக்கத்துக்கு எதிராக நேரடி போராட்டத்தில் முதலில் இறங்கிய ஆபிரிக்க விடுதலைப் போராளிகள் என்பதால் இவருக்கு வரலாற்றில் முக்கிய இடம் இருக்கின்றது. இவரது நினைவாக இன்று மலாவியில் ஜனவரி 15 ஆம் நாள் யோன் சிலம்புவே நாள் என நினைவு கூரப்பட்டு வருகிறது.[1][2][3]

யோன் சிலம்புவே
பிறப்புc. 1871
இறப்பு3 பெப்பிரவரி 1915
படித்த இடங்கள்
  • Virginia University of Lynchburg
மரணத்திற்கு ஓர் ஆண்டுக்கு முன் 1914-ல் எடுக்கப்பட்ட யோன் சிலம்புவேவின் (இடது) இறுதிப் புகைப்படம்

மேற்கோள்கள்

தொகு
  1. D. T. Stuart-Mogg (1997). "A Brief Investigation into The Genealogy of Pastor John Chilembwe of Nyasaland and Some Thoughts upon the Circumstances Surrounding his Death", The Society of Malawi Journal, Vol. 50, No. 1, pp. 44–7.
  2. G. Shepperson and T. Price (1958). Independent African. John Chilembwe and the Origins, Setting and Significance of the Nyasaland Native Rising of 1915. Edinburgh University Press, pp. 25, 36–8, 47.
  3. K. E. Fields (1985). Revival and Rebellion in Colonial Central Africa, Princeton University Press, pp. 125–6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-069-109409-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோன்_சிலம்புவே&oldid=4102535" இலிருந்து மீள்விக்கப்பட்டது