யோவாகீன் காசுதாம்பீது
யோவாகீன் காசுதாம்பீது (Joaquín Gaztambide)என்பவர் ஒரு எசுப்பானிய இசை அமைப்பாளர் ஆவார். இவர் டூடெலா (Tudela) என்னும் இடத்தில் கோயிலின் சேர்ந்திசை இயக்குநர் பால் இரூபில் (Paul Ruble) என்பவரிடம் குரல்பயிற்சி பெறத் தொடங்கினார்.
1834 இல், இவருக்கு 12 அகவை இருக்கும் பொழுது, இவருடைய மாமா இவரை பாம்ப்பலோனா என்னும் ஊருக்கு அனுப்பி அங்கு யோசப்பு குவெல்பென்சு (Joseph Guelbenzu), மரியானோ கார்சியா (Mariano García) ஆகியோரிடம் பியானோவும் இசை அமைப்பையும் பயிலச் செய்தார். போதிய கலைத் தேர்ச்சி பெறாமையாலும் இவற்றில் உளநிறைவு கொள்ளாததாலும், இங்கிருந்து புறப்பட்டு 1842 இல் மடுரிடு (Madrid) நகருக்குச் சென்றார்; அங்கிருந்த இசைக் கூடத்தில் மரியா கிறித்தியானாவிடம் வகுப்புகள் எடுத்துப் பயின்றார். பின்னர் பெடுரோ ஆல்பெனிசு (Pedro Albéniz) என்பாரிடம் பியானோ திறத்தை ஆழப்படுத்திக்கொண்டார், ரமோன் கார்னிசெர் என்பாரிடம் இசையமைபறிவை ஆழப்படுத்திக்கொண்டார். தியேட்டரோ டெல் லா குரூசு (Teatro del Circo), பிரின்சிப்பெ(Principe) ஆகியவற்றின் தாழ்சுருதி (bass) இசையணியில் (orchestra) ஈடுகட்டினார். 1845 இல் தியேட்டரோ டெல் லா குரூசு என்னும் இத்தாலியக் கும்பினியில் இயக்குநர் ஆனார்.