ரசல்-ஐன்ஸ்டைன் கொள்கை விளக்க அறிக்கை

ரசல்-ஐன்ஸ்டைன் கொள்கை விளக்க அறிக்கை (Russell–Einstein Manifesto) என்பது அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்த காலகட்டத்தில், 1955 சூலை 5-ம் தேதி, அணு ஆயுதங்களால் ஏற்படக்கூடிய விபத்துக்களை உலக மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் பெர்ட்ரண்டு ரசல் வெளியிட்ட அறிக்கையாகும். இவ்வறிக்கையை எழுதித் தயாரித்தது ரசல் என்றாலும் அவ்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் பெரும்பாலானவை ஐன்ஸ்டைனின் பரிந்துரைகளே.[1].

1957-ம் ஆண்டு கனடாவில் முதன் முதலாக புக்வாஷ் மாநாடு நடைபெற்ற இடம் - சிந்தனையாளர்களின் தங்கும் விடுதி

ஐன்ஸ்டைன் இறந்த சில நாட்களில் இந்த கொள்கை விளக்க அறிக்கையை அவர் கையெழுத்திட்டு வெளியிட்டார். ரசல், ஐன்ஸ்டைன் உட்பட அறிவியல் மற்றும் அரசியல் துறைகளைச் சேர்ந்த 11 பிரபலங்களும் இவ்வறிக்கையில் கையெழுத்திட்டனர்.

இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு தான் அறிவியல் மற்றும் உலக விவகாரங்களுக்கான முதல் மாநாடு[2] கனடாவில் நடைபெற்றது. அணு ஆயுதங்கள் உலகில் மாந்தர்களின் எதிர்காலத்தையே அழித்து விடக்கூடும் என அச்சம் தெரிவிக்கும் இவ்வறிக்கையில், பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகளின் மூலம் சுமூகமான தீர்வு காணப்பட வேண்டும் என உலகத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்தொகு

  1. "ஐன்ஸ்டைன் பரிந்துரைகள்". 2005-05-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-11-03 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "புக்வாஷ் மாநாடு". 2000-08-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-11-03 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)