ரதி ரகசியம்

(ரதிரகசியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரதி ரகசியம் என்பது கோக்கோகரால் எழுதப்பட்ட காம சாஸ்திரம் தொடர்புடைய நூலாகும். மிகவும் புகழ்பெற்ற இந்த புத்தகம் அவ்வப்போது காம சூத்திரத்துடன் ஒப்பிடப்படுவது உண்டு. இது 12ஆவது நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது.

இந்த நூலுக்கு சிலரால் உரை எழுதப்பட்டுள்ளது. கல்லரசரின் ஜனவசியம் என்ற நூல் கோக்கோகரின் ரதி ரகசியத்தை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த நூல் பழைய கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளது

நூலின் அமைப்பு

தொகு

ரதி ரஹஸ்யத்தில் பதினைந்து அத்தியாயங்கள் மற்றும் 800 வசனங்கள் உள்ளன. அவை பஎண்களின் வெவ்வேறு உடலமைப்புகள், சந்திர நாட்காட்டி , வெவ்வேறு வகையான பிறப்புறுப்புகள் , பல்வேறு வயது பெண்களின் பண்புகள், கட்டிப்பிடித்தல், முத்தங்கள், உடலுறவு மற்றும் உடலுறவு நிலைகள் போன்ற பல்வேறு தலைப்புகளைக் கையாளுகின்றன. மேலும் எடை இழப்பு , மயக்கம் மற்றும் மரணம் ஆகியன குறித்து இதன் அத்தியாயங்கள் விவரிக்கின்றன.[1] இந்தியப் பெண் அழகை விரிவாக விவரிக்கும் முதல் புத்தகம் ரதிராஹஸ்யா . புத்தகம் பெண்களை அவர்களின் தோற்றம் மற்றும் உடல் அம்சங்களின்படி நான்கு உளவியல்-உடல் வகைகளாக வகைப்படுத்தியது. பத்மினி (தாமரை பெண்) சித்ரினி (கலைப் பெண்) சங்கினி (சங்கு பெண்) ஹஸ்தினி (யானை பெண்) பிறப்புறுப்புகளின் அளவின் அடிப்படையில் ஒன்பது வகைகளாக வகைப்படுத்துகிறது.[2][3] பாலுணர்வூட்டல்கள் தொடர்பாகவும் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.


மேற்கோள்கள்

தொகு
  1. Siegfried Lienhard (1984). A History of Classical Poetry: Sanskrit, Pali, Prakrit. Otto Harrassowitz Verlag. p. 119. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-447-02425-9. பார்க்கப்பட்ட நாள் 23 March 2012.
  2. Kazmi, Nikhat (Jun 7, 2004). "Our B-I-G fix". Times of India. http://timesofindia.indiatimes.com/city/bombay-times/Our-B-I-G-fix/articleshow/722511.cms. 
  3. Molly Oldfield; John Mitchinson (21 Apr 2011). "QI: Quite interesting facts about weddings". The Telegraph இம் மூலத்தில் இருந்து 24 April 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110424113633/http://www.telegraph.co.uk/culture/qi/8466023/QI-Quite-interesting-facts-about-weddings.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரதி_ரகசியம்&oldid=3845820" இலிருந்து மீள்விக்கப்பட்டது