ரத்த பிந்து

ரத்த பிந்து என்பவர் இந்து தொன்மவியலில் வருகின்ற அரக்கன் ஆவார். இவரைப் பற்றி மார்க்கண்டேயப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. [1] மகிசாசுரன் எனும் அரக்க வேந்தனை அழிக்க சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட மாதா அரக்கர் படைகளை அழிக்கும் பொழுது, அங்கு ரத்த பிந்து வந்து அவருடன் போர் புரிந்தான்.

ரத்த பிந்துவின் உடலிலிருந்து வருகின்ற ரத்தத்தின் மூலமாக அரக்கர்கள் தோன்றிக் கொண்டே இருந்தார்கள். அதனால் மாதா சண்டிகையை அழைத்து போரின் பொழுது ரத்த பிந்துவின் உடலிருந்து வருகின்ற ரத்த துளிகளை அருந்தும் படை கட்டளைப் பிறப்பித்தார். அதன் படியே ரத்த பிந்துவின் உடலிருந்து தெரித்து விழும் ரத்த துளிகளை சண்டிகை அருந்தியமையால், அர்க்கர் படையானது மேலும் பெருகாமல் தடுக்கப்பட்டு ரத்த பிந்து மகிசாசுர மர்த்தினி மாதாவினால் அழிந்தான்.

இவற்றையும் காண்க

தொகு
  1. மகிசாசுரன்
  2. ஆதிசக்தி
  3. மகாபலிபுரம்
  4. சாக்தம்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

தொகு
  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=11016 மார்க்கண்டேய புராணம் பகுதி-2 - ரத்த பிந்து அழிதல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத்த_பிந்து&oldid=2742879" இலிருந்து மீள்விக்கப்பட்டது