ரன்மசு உயன
ரன்மசு உயன (Ranmasu Uyana, சிங்களம்: රන්මසු උයන) இலங்கையின் பண்டைக்காலத் தலைநகரான அனுராதபுரத்தில் இருந்த ஒரு பூங்கா ஆகும். பொன்மீன் பூங்கா எனப் பொருள்படும், 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்தப் பூங்கா இலங்கையின் கிறித்துவுக்கு முந்தியகால பூங்கா அமைப்புக் கலைக்கான சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. வெஸ்ஸகிரிய என்னும் இடத்தில் காணப்பட்ட கல்வெட்டு ஒன்றின்படி இந்தப் பூங்காவுக்கான நீர் திஸ்ஸவாவியில் இருந்து கொண்டுவரப்பட்டு, பின்னர் இசுருமுனிய விகாரையைச் சுற்றியுள்ள நெல் வயல்களுக்கு நீர்பாய்ச்சப் பயன்படுத்தப்பட்டதாக அறியவருகின்றது.[1][2]
இங்கே பாறையொன்றில் செதுக்கப்பட்ட ஆறு அடி விட்டம் கொண்ட பெரிய வட்டவடிவமான வரைபடம் ஒன்று காணப்படுகிறது. இது சக்வல சக்ரய அல்லது பாவச் சக்கரம் என அழைக்கப்படுகிறது. இது மனிதர்கள், வெளியுலகவாசிகளுடன் தொடர்புகொள்வதற்கான விண்ணகவாயில் (stargate) போன்றதொரு அமைப்பு என்ற கருத்தைச் சிலர் முன்வைத்தனர். ஆனாலும், தொல்லியல் ஆய்வாளர்கள் இதை முற்றிலுமாக மறுத்து இது ஒரு தொடக்ககால நிலப்படமாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Cooray, Nilan (2012). The Sigiriya Royal Gardens: Analysis of the Landscape Architectonic Composition. TU Delft. pp. 25–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781480030978.
- ↑ 2.0 2.1 "Stargate at Ranmasu Uyana". Sri Lanka Tourism Promotion Bureau. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.
- ↑ Gunerathane, Malshan. "Ran Masu Uyana: Fact and fiction". Daily News. Sri Lanka: Associated Newspapers of Ceylon. பார்க்கப்பட்ட நாள் 18 March 2015.