ரம்ஜான் மாத நோன்பின் பயன் (சிற்றிதழ்)
ரம்ஜான் மாத நோன்பின் பயன் இந்தியா, புதுவையிலிருந்து 1937ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய வார இதழாகும்.
சிறப்பு
தொகுஇவ்விதழை அவதானிக்குமிடத்து ஒரு குறிப்பிட்ட தலைப்பை மையப்படுத்தி அத்தலைப்பிற்கான விளக்கம் வழங்கத்தக்க விதத்திலமைந்த சிற்றிதழாகக் கொள்ள முடியும். எனவே ஒரு குறிப்பிட்ட காலத்தில் மாத்திரம் இவ்விதழ் வெளிவந்ததாக அறியமுடிகின்றது.
உள்ளடக்கம்
தொகுஇஸ்லாத்தின் மூலாதாரங்களில் ஒன்றான நோன்பு எனும் விரதத்தைப் பற்றி விளக்கும் இவ்விதழில் நோன்பின் கடமைகள், நோன்பாளி கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள், நோன்பின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல விடயங்கள் எழுதப்பட்டிருந்தன. நோன்புப் பெருநாள், பெருநாளின் சிறப்பு, ஒழுக்கம் போன்றவற்றையும் இது விளக்கியிருந்தது.