ராகசிந்தாமணி
ராகசிந்தாமணி கையேடு தமிழ்த் திரைப்படங்களில் வந்த பாடல்கள் எந்தெந்த ராகத்தில் அமைந்துள்ளன என்பதனை விளக்கும் ஆங்கிலத்தில் அமைன்த ஒரு இசை குறித்த கையேடாகும். இதில் ஹரிதாஸ் திரைப்படம் முதம் 2005ஆம் ஆண்டு வரை வெளிவந்த 1800 தமிழ்த் திரைப்படப் பாடல்கள் 160 ராகங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராகத்தின் ஆரோகணம், அவரோகணம் குறித்த குறிப்புக்களும், மற்றும் ராகம் குறித்த சிறப்புத் தகவல்களும் குறிப்பிடப்பட்டு பாடல்களின் பெயர்களும் அவை இடம் பெறும் திரைப்படங்களின் பெயர்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் இந்தக் கையேட்டின் இறுதியில் பாடல்கள் அகர வரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. திரையிசையில் உள்ள கர்நாடக ராகங்களை அறிய விரும்புவோர்க்கு இது ஒரு பயனுள்ள நூல். இதனைத் தொகுத்து வெளியுட்டுள்ளவர் சென்னையைச் சேர்ந்த சுந்தரராமன்.