ராக் இசை என்பது இளக்கமாக வரையறுக்கப்பட்ட ஒரு மக்கள் இசை வகையாகும். இது 1960 களிலும், அதன் பின்னரும் வளர்ச்சியடைந்தது. இதன் மூலம் 1940களிலும், 50களிலும் பிரபலமாக இருந்த ராக் அண்ட் ரோல், ராக்கபிலிட்டி போன்ற இசை வகைகளில் உள்ளது. இவையும் இதற்கு முன்னிருந்த புளூஸ், நாட்டு இசை போன்றவற்றிலிருந்து வளர்ந்தவையே. எனவே ராக் இசைக்கான மூலம் இதற்கு முந்திய பல்வேறு இசைவகைகளில் காணப்படுவதுடன், நாட்டார் இசை, ஜாஸ், செந்நெறி இசை ஆகியவற்றின் செல்வாக்குக்கும் உட்பட்டுள்ளது.

ராக் இசையின் ஒலி பொதுவாக மின் கிட்டார் அல்லது ஒலிப்பண்பியல் கிட்டார்களில் தங்கியுள்ளது. அத்துடன் இது பாஸ் கிட்டார், தோல் கருவிகள், விசைப்பலகை இசைக்கருவிகள் போன்ற கருவிகளினால் வழங்கப்படும் வலுவான தாள ஒலிகளையும் பயன்படுத்துகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராக்_இசை&oldid=2899271" இலிருந்து மீள்விக்கப்பட்டது