ராசா மந்திரி

ராசா மந்திரி சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு. இதை குறைந்தது நான்கு பேர் விளையாடுவர். எத்தனை பேர் விளையாடுகிறார்களோ அத்தனை துண்டுச்சீட்டுகள் எடுத்துக்கொள்வர். அவற்றில் 3 சீட்டுகளில் மட்டும் பெயர் எழுதப்பட்டிருக்கும். ராசா, மந்திரி, கள்ளன் - என்பன அவற்றில் எழுதப்பட்டிருக்கும். பிற எதுவும் எழுதப்படாத வெற்றுச் சீட்டாக இருக்கும்.

எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகச் சுருட்டி ஓரிடத்தில் போட்டு ஒவ்வொருவரும் ஆளுக்கொன்று எடுத்துக்கொள்வர்.இப்படி எடுக்கும் முறைக்குத் திருவுளம் என்று பெயர். அவரவர் தன் சீட்டில் உள்ளதைத் திறந்து படித்துவிட்டுச் சுருட்டி வைத்துக்கொள்வர்.

ராசா சீட்டு வந்தவர் - மந்திரி எங்கே என்பார். மந்திரி சீட்டு வந்தவர் இதோ இருக்கிறேன் என்பார். கள்ளனைக் கண்டுபிடி என ராசா சீட்டு வந்தவர் கூறுவார். மந்திரி கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்துவிட்டால் மந்திரி கள்ளனுக்குத் தண்டனை வழங்குவார். தப்பானவரைத் திருடன் எனச் சொன்னால் அரசர் மந்திரிக்குத் தண்டனை வழங்குவார். கள்ளன் சீட்டு தனக்கு வரக்கூடாதே என ஒவ்வொருவரும் துடிப்பர். ராசா சீட்டு வந்தால் மகிழ்வர்.

இவற்றையும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராசா_மந்திரி&oldid=1022331" இலிருந்து மீள்விக்கப்பட்டது