ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள் (புதினம்)

ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள் ராஜஸ்தானத்தின் அந்தப்புரங்களில் உழன்ற பெண்களின் துயரங்களை விவரிக்கும் ஒரு புதினம் ஆகும். இதன் ஆசிரியர் ராகுல சாங்கிருத்யாயன். இவர் ராஜஸ்தானத்து அந்தப்புரத்து மாந்தர்களை நேரில் சந்தித்து சேகரித்த உண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இலக்கியமாக்கியுள்ளார்.

ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள்
நூல் பெயர்:ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள்
ஆசிரியர்(கள்):ராகுல சாங்கிருத்யாயன்
வகை:இலக்கியம்
துறை:பெண்ணியம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:291
பதிப்பகர்:பூம்புகார் பிரசுரம்
பதிப்பு:1978


இந்த நூலில் உண்மை நிகழ்ச்சிகளைப் பாரபட்சமின்றி ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார். இதில் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் கி.பி.1910 முதல் 1952 வரையிலுமுள்ள காலகட்டத்தைச் சார்ந்தது. ராஜஸ்தானத்தின் அந்தப்புரத்தில் வாழ்ந்த ராணி கௌரி யின் சோகம் நிறைந்த கதை.