ராஜாஜி மண்டபம்

ராஜாஜி மண்டபம் என்பது சென்னையில் அமைந்துள்ள பொது மண்டபமாகும். முன்பு, விருந்து மண்டபம் (Banqueting Hall) என அழைக்கப்பட்டது. இது இந்திய சமூக செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரில் திப்பு சுல்தானை ஆங்கிலேயர் வெற்றி பெற்றதன் நினைவாக பொறியாளர் ஜான் கோல்டுய்ங்கமால் இம்மண்டபம் கட்டப்பட்டது. இம்மண்டபமானது கிரேக்கத்தின் பார்த்தினன் கோயிலின் சாயலில் அமைக்கப்பட்டது. இந்திய விடுதலைக்கு முன்பு இராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில் சென்னை மாகாண சட்டமன்றக் கூட்டங்கள் இந்த அரங்கிலேயே நடத்தப்பட்டன. அதன் நினைவாக இராஜாஜி காலத்துக்குப் பின்பு, இந்த இடத்துக்கு இராஜாஜி அரங்கம் என்று பெயர் மாற்றப்பட்டது.[1]

ராஜாஜி மண்டபம், ஆண்டு-1905

சான்றுகள்

தொகு
  1. "பார்த்தினான் கோவிலும் ராஜாஜி அரங்கமும்". தினத்தந்தி. செப்டம்பர் 14 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜாஜி_மண்டபம்&oldid=3359333" இலிருந்து மீள்விக்கப்பட்டது