ராஜா ராணி (விளையாட்டு)

ராஜா ராணி என்பது சிறுவர் விளையாட்டுகளில் ஒன்று. துண்டுச் சீட்டுகளில் ராஜா, ராணி, அமைச்சர், திருடன், போலிசு என்று எழுதுவர். சீட்டுகளை மடித்து, குலுக்கிப் போடுவர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துண்டுச் சீட்டை எடுக்க வேண்டும். ராஜா, ராணி, அமைச்சர் ஆகியோருக்கு தரவரிசையில் அதிகம் புள்ளிகள் கிடைக்கும். போலிசு என்று எழுதிய சீட்டு வந்தவர், திருடன் யாரென்று கண்டறிய வேண்டும். சரியாகக் கண்டறிந்தால் அவருக்கு அதிகப் புள்ளிகள். தவறாக இருந்தால் திருடனுக்கு அதிகப் புள்ளிகள். தொடர் ஆட்டங்களில் குறைந்த புள்ளிகளைப் பெற்றவர் தோற்றவராகக் கருதப்படுவார். அதிகப் புள்ளிகள் பெற்றவர் வென்றவர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜா_ராணி_(விளையாட்டு)&oldid=1530067" இலிருந்து மீள்விக்கப்பட்டது