ராஜீந்தர் கவுர் புலரா

இந்திய அரசியல்வாதி

ராஜீந்தர் கவுர் புலரா (Rajinder Kaur Bulara) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் சிம்ரஞ்சித் சிங் மானின் பிளவு பட்ட மாநிலக் கட்சியான சிரோமணி அகாலிதளம் (அமிர்தசரசு) கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். புலரா 9 ஆவது மக்களவையில் உறுப்பினராகவும் இருந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

பிரிக்கப்படாத இந்தியாவின் லாகூர் மாவட்டத்திலுள்ள ராசா சங்கு நகரில் ராசீந்தர் கவுர் 1946 ஆம் ஆண்டு சூன் மாதம் 10 அன்று சர்தார் அர்சா சிங் சாந்துவுக்கும் அவரது மனைவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிரோசுபூரில் உள்ள தேவ் சமாச் மகளிர் கல்லூரியில் பயின்றார். கலை மற்றும் கல்வியில் இளங்கலை பட்டம் பெற்றார்.[1]

தொழில்

தொகு

1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த சீக்கிய எதிர்ப்பு கலவரத்தைத் தொடர்ந்து கவுர் நிவாரணப் பணிகளில் பங்கேற்றார். 1989 ஆம் ஆண்டு நடந்த இந்தியப் பொதுத் தேர்தலின் போது லூதியானாவைச் சேர்ந்த சிரோமணி அகாலிதளத்தின் (மான்) அதிகாரப்பூர்வ வேட்பாளராக இவர் இருந்தார். [1] இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளரான குர்சரன் சிங் காலிப்பை 1,33,729 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து 9 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]. ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக கவுர் தொழில்துறை அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.[1] 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் லூதியானா மேற்கு தொகுதியில் போட்டியிட்ட இவர் வாக்களிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 3.30% மட்டுமே பெற்றார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ராசீந்தர் கவுர் 1967 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 அன்று சர்தார் ராசீந்தர் பால்சிங் கில் என்பவரை மணந்தார்.[1] பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான இவர் போராளி என போலியாகக் காரணம் கூறி காவல்துறையின் கண்டவுடன் சுடும் உத்தரவின்படி கொல்லப்பட்டார்.[4] இவரிடமிருந்து கவுருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Members Bioprofile: Bulara, Shrimati Rajinder Kaur". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
  2. "Statistical Report on General Elections, 1989 to the Ninth Lok Sabha" (PDF). Election Commission of India. p. 324. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
  3. "Statistical Report on General Election, 2002 to the Legislative Assembly of Punjab" (PDF). Election Commission of India. p. 147. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
  4. Singh, Jupinderjit (8 December 2015). "Pinky’s confessions may help provide justice to Bulara family". The Tribune (Chandigarh). http://www.tribuneindia.com/news/punjab/community/pinky-s-confessions-may-help-provide-justice-to-bulara-family/168066.html. பார்த்த நாள்: 27 November 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜீந்தர்_கவுர்_புலரா&oldid=3204276" இலிருந்து மீள்விக்கப்பட்டது