ராஜு சிறீதர்
சின்னராசு சிறீதர், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த 27 வயது வில்வித்தை வீரர்.[1] இவர் 2010 காமன்வெல்த் போட்டிகளில் " கூட்டம்பு " குழு பிரிவில் ரித்துல் சாட்டர்ஜீ, ஜிக்னேசு ஆகியோருடன் இணைந்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.[2] இவர் தற்போது இராணுவத்தில் அவில்தாராகப் பணிபுரிகிறார். இவரது தந்தை சின்னராசு ஒரு நெசவுத் தொழிலாளி.
வெற்றிகள்
தொகுகாமன்வெல்த் விளையாட்டு போட்டியுடன் சேர்த்து, ஸ்ரீதர் பெற்ற 23 பதக்கங்களில், 12 தங்கப் பதக்கங்கள், 5 வெண்கலப் பதக்கங்கள், 6 வெள்ளிப் பதக்கங்கள் ஆகியவை அடங்கும். இந்தோனேசியா, சீனா, பர்க்கி, குரோஷியா போன்ற நாடுகளில் நடந்த வில்வித்தை போட்டிகளில் இவர் பதக்கம் பெற்றுள்ளார்.[1]
ஏழ்மையான சூழல்
தொகுசிறீதரின் குடும்ப நிலை இவரது வில்வித்தை விளையாட்டிற்குத் தேவைப்படும் பொருளாதார வசதியைத் தரவில்லை; இவரது பயிற்சியாளர் சீகான் உசைனியின் முயற்சியில் 2 லட்சம் நிதியுதவி பெற்றுத் தரப்பட்டது.[3]