ராடி மாடு (இந்தி:राटि) இது ராட் என்றும் உச்சரிக்கப்படுவது இந்தியாவைச் சேர்ந்த மாட்டு இனமாகும். இது ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானேர், கங்கா நகர் மற்றும் ஹனுமன்கர் மாவட்டங்களில் அடங்கிய பகுதியில் உருவானது. [1] இது இந்தியாவில் முக்கியமாக இரட்டை நோக்கங்களுக்க வளர்க்கப்படும் கால்நடை இனமாகும் இவை அதன் பால் கறக்கும் தன்மை மற்றும் வேலை செய்யம் திறன் ஆகியவற்றுக்காக அறியப்படுகின்றன. இந்த மாடுகள் உள்நாட்டில் இரண்டு வகைகள் உள்ளன, ராட்டி மாடுகள் உழைப்பு பணிகளுக்கான இனமாகவும், [2] ராட் மாடுகள் கறவை மாடுகளாக பயன்படுத்தப்படுகின்றன. ராட் மாடுகள் ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் தோன்றியவை, மற்றும் ராட் பழங்குடி மக்களால் வளர்க்கப்பட்டவை. ராட் மாடுகள் வெள்ளை நிறத்துடனும் அதில் கருப்பு அல்லது சாம்பல் நிற புள்ளிகளுடனும், [3] ராட்டி மாடுகள் பொதுவாக பழுப்பு நிறம் கொண்டவை.

ராடி பசு
ராடி காளை

மேற்கோள்கள் தொகு

  1. "National Dairy Development Board". Dairy Knowledge. பார்க்கப்பட்ட நாள் 16 May 2015.
  2. "Rathi cattle". Department of Animal Science - Oklahoma State University. பார்க்கப்பட்ட நாள் 16 May 2015.
  3. "Rath cattle". Department of Animal Science - Oklahoma State University. பார்க்கப்பட்ட நாள் 16 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராடி_மாடு&oldid=2167434" இலிருந்து மீள்விக்கப்பட்டது