போர் புனைவு

(ராணுவப் புனைவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

போர் புனைவு (War fiction) அல்லது இராணுவப் புனைவு (Millitary fiction) என்பது ஒருவகை புனைவுப் பாணி. போர்களத்தில் நிகழும் ஆயுதமேந்திய மோதல்களையும், போரில் ஈடுபட்டுள்ள நாட்டின் சமூகத்தையும் களமாகக் கொண்டு படைக்கப்படும் புனைவுகள் இப்பாணியைச் சார்ந்தவையாகக் கருதப்படுகின்றன. பழங்காலத்தில் அரசர்கள் நாயகர்கள் ஆகியோரின் தீரச்செயல்களை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்ட காவியங்களும் நெடுங்கவிதைகளும் போர் புனைவுப் பாணியின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன. பழங்கால போர்ப் புனைவுப் படைப்புகள் முழுவதும் கற்பனையாக அல்லாமல், உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் படைக்கப்பட்டன. பின் மெல்ல அவை கற்பனை நிகழ்வுகளையும் மாந்தர்களையும் கருபொருளாகப் பயன்படுத்தத் தொடங்கின. 19ம் நூற்றாண்டில் போர் அடிப்படையில் முழுவதும் கற்பனையான கதைகளை எழுதும் வழக்கம் பரவலானது. 20ம் நூற்றாண்டில் போர் புனைவுப் படைப்புகள் உலகங்கெங்கும் பல மொழிகளில் எழுதப்படுகின்றன. தற்சமயம் புதினங்கள், சிறுகதைகள் மட்டுமல்லாது, திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், நிகழ்பட ஆட்டங்கள், வரைகதைகள், படப் புதினங்கள் என பல துறைகளிலும் போர்ப் புனைவு பாணி பின்பற்றப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்_புனைவு&oldid=2980240" இலிருந்து மீள்விக்கப்பட்டது