ராதிகா மதன்

இந்திய தொலைக்காட்சி நடிகை

ராதிகா மதன் (Radhika Madan) ஓர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.[2][3] ஆரம்பத்தில், ராதிகா மதன் புதுதில்லியில் நடன பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றினார். 2014 ஆம் ஆண்டில், கலர்ஸ் டிவியின் மேரி ஆசிகி தும் சே ஹாய் என்ற தொலைக்காட்சி தொடரில் நடிகர் சக்தி அரோராவுக்கு ஜோடியாக அறிமுகமானார். இத் தொலைக்காட்சி தொடர் 2016 ஆம் நிறைவடைந்தது. பின்னர், விஷால் பரத்வாஜின் நகைச்சுவை-நாடக படகா (2018) திரைப்படத்தின் மூலம் ராதிகா மதன் பாலிவுட்டில் அறிமுகமானார். படகா திரைப்படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விழாவில் சிறந்த அறிமுக (பெண்) மற்றும் சிறந்த நடிகைகான (விமர்சகர்கள்) பரிந்துரைகளைப் பெற்றார்.

ராதிகா மதன்
பிறப்புடெல்லி, இந்தியா[1]
தேசியம்இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2014 - தற்சமயம் வரை

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

ராதிகா மதன் டெல்லியைச் சேர்ந்தவர்.கலர்ஸ் டிவியில் ஒன்றரை வருடம் ஒளிபரப்பான மேரி ஆசிகி தும் சே ஹாய் என்ற தொலைக்காட்சி நாடகத்தில் நடித்து தனது நடிப்புபணியை தொடங்கினார்.[4][5] இவர் நடன உண்மைநிலை நிகழ்ச்சி ஜலக் டிக்லா ஜா (சீசன் 8) இல் பங்குபற்றினார் [6]

தொலைக்காட்சி தொடரில் தடித்த பின், சன்யா மல்ஹோத்ராவுடன் விஷால் பரத்வாஜின் நகைச்சுவை நாடகமான படகா திரைப்படத்தின் மூலம் இந்தித் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இத் திரைப்படம் சரண் சிங் பாதிக் எழுதிய டூ பெஹ்னென் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. பாத்திக்கின் சகோதரர்களின் மனைவிகளை அடிப்படையாகக் கொண்ட கதை. மதன் மற்றும் மல்ஹோத்ரா இருவரும் பேச்சுவழக்கு மற்றும் கதாபாத்திரத்தின் நுணுக்கங்களுக்காக உண்மையான பெண்களை சந்தித்தனர். இப் படத்திற்காக மல்ஹோத்ரா மற்றும் மதன் இருவரும் ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள ரோன்சி கிராமத்தில் தங்கி ராஜஸ்தானி பேச்சுவழக்கு கற்றுக்கொண்டனர். எருமைகளில் இருந்து பால் கறத்தல், கூரைகளை வேய்தல், சுவர்களை சாணத்தால் பூசுதல், மற்றும் நீண்ட தூரம் நடந்து செல்லல் போன்றவற்றையும் அவர்கள் பழக்கப்படுத்திக் கொண்டனர்.[7] மேலும் இந்த படத்திற்காக அவர்கள் 10 கிலோ உடல் எடையையும் அதிகரிக்க வேண்டியிருந்தது.[8][9]

ராதிகா மதன் இயக்குநர் வாசன் பாலாவின் ஆக்சன் காமெடி மார்ட் கோ டார்ட் நஹி ஹோட்டாவில் தோன்றினார். இது 2018 டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் மிட்நைட் மேட்னஸ் பிரிவில் திரையிடப்பட்டு, அதில் மக்கள் தேர்வு விருதை வென்றது.[10][11] இந்த படம் 2018 மமி திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.[12]

தொலைக்காட்சி நாடகம்

தொகு
ஆண்டு சீரியல் பங்கு சேனல் குறிப்புகள்
2014-2016 மேரி ஆஷிகி தும் சே ஹாய் இஷானி வாகேலா கலர்ஸ் டிவி கதா நாயகி (முன்னணி பங்கு)

உண்மைநிலை நிகழ்ச்சிகள்

தொகு
ஆண்டு சீரியல் பங்கு சேனல்
2014 ஜலக் டிக்லா ஜா 7 விருந்தினர் கலர்ஸ் டிவி
2014-15 பெட்டி கிரிக்கெட் லீக் (ஆதரவு குழுவுக்கு விருந்தினர்) சோனி டிவி
2015 ஜலக் டிக்லா ஜா 8 போட்டியாளர் (அகற்ற 3 வது பங்கேற்பாளர்) கலர்ஸ் டிவி
2015 நாச் பாலியே 7 விருந்தினர் / ஆதரவு சக்தி அரோரா ஸ்டார் பிளஸ்

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு தலைப்பு எழுத்து இயக்குநர் குறிப்புகள்
2018 படகா சம்பா குமாரி விஷால் பரத்வாஜ் சிறந்த பெண் அறிமுகத்திற்கான திரை விருது



</br> பரிந்துரைக்கப்பட்டவர் – சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருது



</br> பரிந்துரைக்கப்பட்டவர் – சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருது
2019 மார்ட் கோ டார்ட் நஹி ஹோட்டா சுப்ரி வாசன் பாலா
2020 ஆங்ரேஸி நடுத்தர தரிகா ஹோமி அடஜானியா தயாரிப்பிற்குப்பின்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

தொகு
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான விருதுகளின் பட்டியல்
ஆண்டு விருது வகை
2015 ஜீ தங்க விருதுகள் சிறந்த அறிமுக நடிகை
இந்தியன் டெலிவிசன் அகாடமி விருது சிறந்த புதுமுகம் (பெண்)
தொலைக்காட்சி ஸ்டைல் விருது சிறந்த ஸ்டைலிஷ் ஜோடி(சக்தி அரோராவுடன் பகிரப்பட்டது)
கோல்ட் விருது சிறந்த நடிகை (பெண்)
இந்தியன் டெலி விருது புது முக நடிகை (பெண்)
கலகர் விருதுகள் சிறந்த நடிகை
ஆசியன் வீவர் தொலைக்காட்சி விருது (AVTA) ஆண்டின் சிறந்த புதுமுக நடிகை
ஐடிஎ பிரபலமானவர் விருது
டிஐஐஎப்ஏ ஆண்டின் மிக பிரபலமான முகம்
இந்தியன் டெலி விருது தொலைக்காட்சியின் சிறந்த ஜோடி
டெலிவிசன் ஸடைல் விருது சிறந்த ஸ்டைலிஷ்
திரைப்படத்திற்கான விருதுகளின் பட்டியல்
ஆண்டு விருது வகை
2018 ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள் மிகவும் நம்பிக்கைக்குரிய புதுமுகம் (பெண்)
2019 ஸீ சினி விருதுகள் சிறந்த துணை நடிகை
2019 பாலிவுட் திரைப்பட பத்திரிகையாளர் விருதுகள் சிறந்த பெண் துணை நடிகை
2019 64வது பிலிம்பேர் விருதிகள் சிறந்த நடிகை(விமர்சனம்)

குறிப்புகள்

தொகு
  1. "Radhika Madan to debut with Ekta Kapoor's show". Deccan Chronicle. 20 June 2014. பார்க்கப்பட்ட நாள் 16 March 2015.
  2. "Happy Birthday Radhika Madan: 6 pictures of the gorgeous Meri Aashiqui Tumse Hi actress you cannot miss". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-11.
  3. "Radhika Madan: I wasn't keen on doing the same thing again on TV - Times of India". https://m.timesofindia.com/tv/news/hindi/radhika-madan-i-wasnt-keen-on-doing-the-same-thing-again-on-tv/articleshow/63666865.cms. 
  4. "'Meri Aashiqui Tum Se Hi' wraps up shoot; fans brace for a dramatic ending". International Business Times. 6 February 2016. பார்க்கப்பட்ட நாள் 7 February 2016.
  5. "Why 'Meri Aashiqui Tumse Hi' had to wrap up". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 7 April 2016.
  6. "Jhalak Dikhhla Jaa Reloaded: Radhika Madan aka Ishani of Meri Aashiqui Tumse Hi eliminated". 13 August 2015. https://www.indiatoday.in/television/reality-tv/story/radhika-madan-aka-ishani-eliminated-from-jhalak-dikhhla-jaa-reloaded-meri-aashiqui-tumse-hi-288066-2015-08-13. பார்த்த நாள்: 1 November 2018. 
  7. Iyer, Sanyukta (7 April 2018). "Sanya Malhotra, Radhika Madan in Vishal Bhardwaj's next". Mumbai Mirror. https://mumbaimirror.indiatimes.com/entertainment/bollywood/sanya-malhotra-radhika-madan-in-vishal-bhardwajs-next/articleshow/63651588.cms. பார்த்த நாள்: 26 September 2018. 
  8. Countinho, Natasha (23 June 2018). "Vishal Bhardwaj's Pataakha opens on September 28". Mumbai Mirror. https://mumbaimirror.indiatimes.com/entertainment/bollywood/vishal-bhardwajs-pataakha-opens-on-september-28/radhika-madan-and-sanya-malhotra-right-in-pataakha/articleshow/64703084.cms. பார்த்த நாள்: 26 September 2018. 
  9. "This is why Sanya Malhotra is gaining weight for Vishal Bhardwaj’s film". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 11 May 2018. https://www.hindustantimes.com/bollywood/this-is-why-sanya-malhotra-is-gaining-weight-for-vishal-bhardwaj-s-film/story-jhudJkcTkh5o1mpjuJb4fJ.html. பார்த்த நாள்: 26 September 2018. 
  10. "Vasan Bala's 'Mard Ko Dard Nahi Hota' to premiere at TIFF". Business Standard. 10 August 2018. https://www.business-standard.com/article/pti-stories/vasan-bala-s-mard-ko-dard-nahi-hota-to-premiere-at-tiff-118081000339_1.html. பார்த்த நாள்: 17 August 2018. 
  11. "Mard Ko Dard Nahi Hota wins audience award at TIFF". India Today. 17 September 2018. https://www.indiatoday.in/movies/bollywood/story/mard-ko-dard-nahi-hota-wins-audience-award-at-tiff-1341857-2018-09-17. பார்த்த நாள்: 4 October 2018. 
  12. "A full house: 'Mard Ko Dard Nahi Hota' gets standing ovation at MAMI Mumbai Film Festival". The Economic Times. 27 October 2018 இம் மூலத்தில் இருந்து 28 அக்டோபர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181028225946/https://economictimes.indiatimes.com/magazines/panache/a-full-house-mard-ko-dard-nahi-hota-gets-standing-ovation-at-mami-mumbai-film-festival/articleshow/66387494.cms. பார்த்த நாள்: 28 October 2018. 

வெளி இணைப்புகள்

தொகு
  • Radhika Madan
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராதிகா_மதன்&oldid=4176905" இலிருந்து மீள்விக்கப்பட்டது