ரான்டா சினியோரா
ராண்டா ஜார்ஜ் யாகூப் சினியோரா(Randa George Yacoub Siniora) (பிறப்பு: 1961) இவர் பாலஸ்தீனிய மனித உரிமைகள் மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் மனித உரிமை மீறல்களை மூன்று தசாப்தங்களாக ஆவணப்படுத்தியுள்ளார். தற்போது ஜெருசலேமில் உள்ள சட்ட உதவி மற்றும் ஆலோசனைக்கான மகளிர் மையத்தின் (WCLAC) பொது இயக்குநராக உள்ளார். [1]
வாழ்க்கை
தொகுராண்டா சினியோரா ஐக்கிய இராச்சியத்தின் எசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்தார். சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தில் எல்.எல்.எம் பயின்றார். பின்னர், கெய்ரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சமூகவியல்-மானுடவியலில் முதுகலை பட்டமும் பெற்றார். மேற்குக் கரையில் உள்ள பெண்கள் ஜவுளித் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வு, இஸ்ரேலிய நிறுவனங்களுக்கான பொருட்களை உற்பத்தி செய்யும் இவரது ஆய்வறிக்கை பின்னர் அமெரிக்க பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. ஆர்கிரி இம்மானுவேல் மற்றும் சமீர் அமீன் ஆகியோரின் சார்புக் கோட்பாட்டை பாலஸ்தீன நிலைமைக்கு இங்கே சினியோரா பயன்படுத்தினார். [2] பெண்கள் மத்தியில் அரசியல் மற்றும் தொழிலாளர் அமைப்பின் ஒப்பீட்டளவில் குறைந்த அளவை விளக்க, ஆணாதிக்க கட்டமைப்புகளின் சமூக தொடர்ச்சிகளை இவர் வலியுறுத்தினார். இது வீட்டிலும் பணியிடத்திலும் பெண்களைக் கட்டுப்படுத்தியது:
பணி
தொகு1987 முதல் 1997 வரை சினியோரா மனித உரிமைகள் அமைப்பான அல்-ஹக்கில் சட்ட ஆராய்ச்சியாளராகவும், பெண்கள் உரிமைகள் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். பெண்களைப் பாதுகாக்க சட்ட மாற்றங்கள் தேவை என்பதில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான இவரது முயற்சிகள் முதல் இன்டிபாடாவால் தடைபட்டன:
1997 முதல் 2001 வரை சினியோரா சட்ட உதவி மற்றும் ஆலோசனைக்கான மகளிர் மையத்தில் வலைபின்னல் மற்றும் வழக்கறிஞரின் தலைவராக இருந்தார். 2001 முதல் 2005 வரை இவர் அல்-ஹக்கின் பொது இயக்குநராக இருந்தார்.
தொழில்
தொகுசெப்டம்பர் 2007 முதல் சூன் 2015 வரை சினியோரா பாலஸ்தீனத்தில் மனித உரிமைகளுக்கான சுதந்திர ஆணையத்தின் மூத்த நிர்வாக இயக்குநராக இருந்தார். 2015 ஆம் ஆண்டில் இவர் சட்ட உதவி மற்றும் ஆலோசனைக்கான மகளிர் மையத்தின் பொது இயக்குநரானார்.
அக்டோபர் 2018இல் சினியோரா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் உரையாற்றிய முதல் பெண் பாலஸ்தீனிய பிரச்சாரகர் ஆனார். சினியோரா அதிக உள்நாட்டு வன்முறை விகிதம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் பெண்மணிகளின் அதிகரித்த விகிதம் பற்றிய பிரச்சினையை எழுப்பினார். பெண்கள் அரசியல் விலக்கு குறித்த பரந்த பிரச்சினையையும் இவர் எழுப்பினார்:
மேற்கோள்கள்
தொகு- ↑ Rebecca Ratcliffe, Women in Palestine face violence and political exclusion, campaigner tells UN, தி கார்டியன், 26 October 2018. Accessed 11 March 2020.
- ↑ Maya Rosenfeld (2004). Confronting the Occupation: Work, Education, and Political Activism of Palestinian Families in a Refugee Camp. Stanford University Press. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8047-4987-9.