ராபர்ட் ஆண்டர்சன்
இராபர்ட் ஆண்டர்சன் அவர்கள் 1806 ஆம் ஆண்டு சென்னை அரசாங்க அலுவலராக நியமிக்கப்பட்டார்.
கல்வி
தொகுஇங்கிலாந்தில் உள்ள ஹார்ட்போர்டில் கிழக்கிந்திய கம்பெனிக் கல்லூரியில் கல்வி பயின்றார். அக்கல்லூரியில் படிக்கும் மாணவர் இந்திய மொழி ஒன்றினைப் படிக்க வேண்டும். அப்படிப் படித்ததால் தென்னிந்தியாவில் இவர் வேலை பார்க்க வாய்ப்பளித்தது.[1]
பதவிகள்
தொகு1817 ஆம் ஆண்டில் இந்திய அரசின் பர்சிய மொழிபெயர்ப்பாளரானார். 1818 ஆம் ஆண்டு முதல் 1820 ஆம் ஆன்டு வரை கல்லூரியின் ஆட்சிக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.
தமிழ்ப் பணி
தொகுஇவர் ஆங்கிலத்தில் தமிழ் இலக்கண நூல் ஒன்றை எழுதியுள்ளார். அதன் கொடுந்தமிழ் பெயர் கொடுந்தமிழ் அல்லது பேச்சுத்தமிழ் விதிகளோடு கூடிய தமிழ் இலக்கண அடிப்படைகளும், செந்தமிழ் அல்லது மொழியின் அழகிய நடைப் பற்றிய அறிமுகமும் என்பதாகும். இந்நூல் 1821 ஆம் ஆண்டு இலண்டனில் அச்சிடப்பட்டது.
பார்வை நூல்
தொகு- ↑ ஐரோப்பியர் தமிழ்ப்பணி, பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம். சென்னைப் பல்கலைக்கழகம், 2௦03
- ↑ ஐரோப்பியர் தமிழ்ப்பணி, பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம். சென்னைப் பல்கலைக்கழகம், 2௦03