ராபர்ட் சிங்கிள்டன்
ராபர்ட் சிங்கிள்டன் (Robert Singleton) (இறப்பு 1544) என்பவர் ஜான் என்றும் அறியப்படுகிறார். இவர் ஒரு ஆங்கில கத்தோலிக்க திருச்சபைப் பாதிரியார் ஆவார். தேசத்துரோகக் குற்றச்சாட்டில் இவர் தூக்கிலிடப்பட்டார். இவரை ஒரு கத்தோலிக்கத் தியாகியாக அன்டோனியோ போஸ்ஸெவினோ, தனது புனிதக் கருவி (Apparatus Sacer) என்ற படைப்பில் கருதுகிறார்.
வாழ்க்கை
தொகுஇவர் லங்காஷயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இங்கிலாந்தில் உள்ள அக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். ஆனால் பட்டம் பெற்றதாகத் தெரியவில்லை. இவர் கத்தோலிக்க மதபோதகராக ஆனார். மேலும் 1543ஆம் ஆண்டில் தேசத்துரோகமாக கருதப்பட்ட சில வார்த்தைகளுக்காக ஆயர் நீதிமன்றத்திற்கு முன் கொண்டுவரப்பட்டார். இவர் ஜெர்மைன் கார்டினர் மற்றும் ஜான் லார்க் ஆகியோருடன் 7 மார்ச் 1544 அன்று டைபர்னில் தூக்கிலிடப்பட்டார்.
படைப்புகள்
தொகு- ஏழு தேவாலயங்களின் உரை
- பரிசுத்த ஆவியின்
- சில தீர்க்கதரிசனங்கள் பற்றிய கருத்து
- பூமியின் கோட்பாடு, ஹென்றி VII க்கு அர்ப்பணிக்கப்பட்டது. தாமஸ் டேனர் இதை உலகின் ஏழு யுகங்கள் என்கிறார்.
இவர் எழுதியிருப்பதாக கூறப்படும் இவை எதுவும் அச்சிடப்பட்டதாக தெரியவில்லை.
மேற்கோள்கள்
தொகு- This article incorporates text from a publication now in the பொது உரிமைப் பரப்பு: "Singleton, Robert (d.1544)". Dictionary of National Biography. (1885–1900). London: Smith, Elder & Co.