ராபர்ட் சூமான்
ராபர்ட் அலெக்சாண்டர் சூமான் என்றும் அழைக்கப்படுகின்ற ராபர்ட் சூமான் (Robert Schumann - 8 ஜூன், 1810 – 29 ஜூலை, 1856) ஒரு ஜேர்மானிய இசையமைப்பாளரும், அழகியல்வாதியும் (aesthete), செல்வாக்குப்பெற்ற இசைத் திறனாய்வாளரும் ஆவார். இவர் 19 ஆம் நூற்றாண்டின் மிகவும் புகழ் பெற்ற புனைவிய (Romantic) இசையமைப்பாளர்களுள் ஒருவர்.
ராபர்ட் சூமான் | |
---|---|
![]() | |
பிறப்பு | 8 சூன் 1810 Zwickau |
இறப்பு | 29 சூலை 1856 (அகவை 46) பான் |
படித்த இடங்கள் | |
பணி | இசையமைப்பாளர், இசை நடத்துநர், music pedagogue |
வேலை வழங்குபவர் |
|
குறிப்பிடத்தக்க பணிகள் | See list of compositions by Robert Schumann |
பாணி | chamber music |
வாழ்க்கைத் துணை(கள்) | Clara Schumann |
குழந்தைகள் | Julie Schumann, Ferdinand Schumann |
கையெழுத்து | |
![]() | |
இவர் ஒரு திறமையான பியானோ இசைக் கலைஞராக வேண்டும் என விரும்பினார். பிரீட்ரிக் வியெக் (Friedrich Wieck) என்னும் இவரது ஆசிரியர், தன்னிடம் சில வருடங்கள் படித்தால் அவரை ஐரோப்பாவிலேயே பெரிய பியானோக் கலைஞராக ஆக்குவதாக உறுதியளித்திருந்தார். ஆனால், கையில் ஏற்பட்ட காயம் ஒன்றினால் சூமானின் எண்ணம் ஈடேறாமல் போயிற்று. என்னும் தனது இசை ஆற்றலை இசையமைப்பில் பயன்படுத்த அவர் முடிவு செய்தார். 1840 வரையில் இவரது வெளியிடப்பட்ட இசையமைப்புக்கள் அனைத்துமே பியானோவுக்கு ஆனவை. பின்னர் இவர் பியானோவுக்கும், இசைக்குழுக்களுக்குமான (orchestra) ஆக்கங்களை உருவாக்கினார். இசை பற்றிய இவரது எழுத்துக்கள் பல இவரும் சேர்ந்து நிறுவி, லீப்சிக்கிலிருந்து வெளிவந்த இசைக்கான சஞ்சிகையான "இசைக்கான புதிய சஞ்சிகை"யில் (Neue Zeitschrift für Musik) வெளியாயின.
இவரது பியானோ ஆசிரியரான பிரீட்ரிக் வியெக்குடன் நடைபெற்ற கடுமையான வழக்குகளுக்குப் பின்னர் 1840ல், அவரது மகளும் பியானோக் கலைஞருமான கிளாரா வியெக்கைத் திருமணம் செய்துகொண்டார். தற்கொலைக்கு முயற்சி செய்த இவர், அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் மனநோய் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். இவர் தனது நடு வயதிலேயே காலமானார்.