ராபர்ஸ் குகை , இந்தியா

இராபர்சு குகை (Guchhupani என உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது), நதி ஒன்று இந்த குகை வழியாக பாய்ந்து வருகிறது.

Robbers Cave
Robbers Cave and River

இந்தியாவில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் இமயமலை அடிவாரத்தில் டேராடூன் நகரில் இருந்து  சுமார் 8 கி. மீ., தொலைவில் இந்த குகை அமைந்திருக்கிறது.

டேராடூனிலிருந்து 8 கிமீ தொலைவில் இமயமலையின் அடிவாரத்தில் கொள்ளையர்கள் குகை (Robber's Cave) என்ற குகை இருக்கிறது. பல வருடங்களுக்கு முன் கொள்ளையர்கள் கொள்ளையடித்த பணத்தை பதுக்கி வைக்க இந்த குகையை பயன்படுத்தினார்களாம். இந்த இடத்தை குச்சுபானி (Guchhupani) என்றும் அழைக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் இந்த இடத்தை Robber's Cave என்று அழைக்கத்தொடங்கினர். முன்பு இந்த பகுதிக்குச் செல்லப் பயப்பட்ட மக்கள் இப்போது உலகம் முழுவதிலிருந்தும் வந்து பார்த்து இரசித்துச் செல்கின்றனர். இங்கு ஒரு அறுநூறு மீட்டர் நீழமுள்ள குகை இருக்கிறது. அதிகபட்சமாக 10 மீட்டர் உயரம் இருக்கிறது. குகையின் நடுப்பகுதியில் ஓரிடத்தில் தண்ணீர் அருவி மாதிரி கொட்டுகிறது. குகையின் இறுதிப்பகுதியிலும் ஒரு அருவி கொட்டுகிறது. குகை வழியாக தண்ணீர் பாய்ந்து வருகிறது. பனியில் இருந்து உருகி வரும் தண்ணீரில் கால் வைத்தாலே விர்ரென்று காலை இழுத்துவிடுவோம். ஆனால் கொஞ்ச நேரம் தண்ணீரில் நடந்தால் அந்த குளிரோடு கலந்து விடுவோம். கடுமையான குளிரில் இருட்டு குகையினுள் நடப்பது ஒரு இனிய அனுபவம். குளிரை தாங்கும் சக்தியுள்ளவர்கள் குகையின் இறுதிப்பகுதியில் இருக்கும் அருவியில் குளித்துவிட்டு திரும்பலாம்.

References தொகு

External links தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ஸ்_குகை_,_இந்தியா&oldid=3596358" இலிருந்து மீள்விக்கப்பட்டது