ராபின் தேவனேஷ்

ராபின் தேவனேஷ் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் ஒய்வு பெற்ற இயற்பியல் வல்லுநர் ஆவார். இவர் ஹெர்ட்ஃபோர்டு கல்லூரி மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் முதல்வர் ஆவார். இவர் ஃபெல்லோ மற்றும் இயற்பியலில் பட்டம் பெற்றவர். இவர் நெகிழ்வற்ற சிதறல் என்ற துறையில் சிறப்பாக பணியாற்றினார். இந்த பணிக்காக டிசம்பர் 2009-இல் மேக்ஸ் பார்ன் பதக்கம் வழங்கப்பட்டது. அந்த துறையில் இவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

கல்வி மற்றும் ஆரம்பகால வாழ்க்கை தொகு

தேவனெஷ் பெனிடிக்டினேஸ் என்ற பள்ளியில் ஆரம்பகால கல்வியை கற்றார். இவர் கேம்பிரிட்ஜ் மற்றும் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் மேற்படிப்பு பயின்றார். இவர் 1979-இல் ஆக்ஸ்போர்டில் சேர்ந்தார்.இவர் யூகே பல்கலைக்கழங்களில் பல ஆராய்ச்சி நிலைகளை மேற்கொண்டார். மேலும் 1968-இல் முனைவர் பட்டத்தை பெற்றபின் ஹம்பர்க்கில் உள்ள டெசி ஆய்வகத்தில் பணிபுரிந்தார்.

தேவனேஷ் நெகிழ்வற்ற சிதறல் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

விருதுகள் தொகு

மார்ச் 2009-இல் மார்க்ஸ் பார்ன் என்ற விருது தேவனேஷ்க்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை அய் ஒ பி வழங்கியது. இவரின் பணியானது அணுககள் கட்டமைப்பின் மீதான புரிதலுக்கும் முக்கிய முன்னேற்றங்களுக்கும் வழிவகுத்தது. புரோட்டானின் கட்டமைப்பு கண்டறிவதில் இவரின் பங்கு மகத்தானது. குவார்க் குரோமோ டைனமிக்சை புரிந்துகொள்வதில் பிஜோர்சென் எக்ஸ், குவார்க் மற்றும் குளுக்கோன் டென்சீசியஸின் வகைப்பாடு முக்கிய பங்கு வகித்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபின்_தேவனேஷ்&oldid=3596355" இலிருந்து மீள்விக்கப்பட்டது