ராமகிருஷ்ணன் (செயற்பாட்டாளர்)

ராமகிருஷ்ணன் அல்லது அமர் சேவா ராமகிருஷ்ணன் (ஆங்கில மொழி: Ramakrishnan) ( பிறப்பு: 6 மே 1954) என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் சார்ந்த சமூக செயற்பாட்டாளாராவார். தமிழ்நாட்டு ஆய்க்குடியில் அமர் சேவா சங்கம் என்ற அமைப்பின் நிறுவனராவார்..[1] மாற்றுத்திறனாளிக்கான மருத்துவம் மற்றும் மறுவாழ்விற்கான இவரின் பங்களிப்பிற்கு 2020 இல் பத்மஸ்ரீ விருதினைப் பெற்றார்.[2]

சி. ராமகிருஷ்ணன்
2012 பிப்ரவரி 18 இல் மரு. மேரி வர்கீஸ் விருதினைப் பெறுகிறார்.
பிறப்பு6 மே 1954 (1954-05-06) (அகவை 70)
சேலம், இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்அமர் சேவா ராமகிருஷ்ணன்
அறியப்படுவதுஅமர் சேவா சங்கம்
சொந்த ஊர்ஆய்க்குடி
பெற்றோர்சிவசுப்ரமணியன், சரஸ்வதி
வாழ்க்கைத்
துணை
சித்ரா
விருதுகள்பத்மஸ்ரீ

இளமைக் காலம்

தொகு

சேலத்தில் 1954 இல் சிவசுப்ரமணியன் சரஸ்வதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். தஞ்சாவூரில் பள்ளிக்கல்வியைப் பயின்று, ஆய்க்குடிக்குப் பின்னர் வந்தடைந்தார்.[3] 1970களில் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் எந்திரப் பொறியியல் பட்டம் பெற்றவர். 1975 ஜனவரி 10 இல் நான்காமாண்டு பொறியியல் படித்துக் கொண்டிருக்கும் போது பெங்களூரில் நடந்த கடற்படை அதிகாரி நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டார்.[4] அப்போது நடந்த உடல் தகுதிச் சோதனையின் போது ஏற்பட்ட விபத்தில் கழுத்திற்குக் கீழ்ப் பகுதிகள் செயலிழந்துவிட்டன.

குடும்பம்

தொகு

1994 இல் சித்ரா என்பவரைத் திருமணம் செய்தார். ஆய்க்குடியில் வசிக்கிறார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Official website of Amar Seva Sangam". பார்க்கப்பட்ட நாள் 28 October 2012.
  2. "பத்ம விருதுகள் அறிவிப்பு: தமிழகத்தின் மாற்றுத்திறனாளி சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு விருது". தினமணி. https://www.dinamani.com/latest-news/2020/jan/25/govt-announces-names-of-padma-shri-awardees-on-republic-day-3340245.html. பார்த்த நாள்: 26 January 2020. 
  3. "A Life Reinvented". பார்க்கப்பட்ட நாள் 28 October 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. 4.0 4.1 "The Real Hero". The Hindu. 19 April 2012. http://www.thehindu.com/life-and-style/metroplus/article3332072.ece. பார்த்த நாள்: 4 November 2012.