இராம்கார் ஏரி

(ராம்கர் ஏரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இராம்கார் ஏரி (Ramgarh Lake) இது, இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் உள்ள ஜம்வா ராம்கர் அருகே அமைந்துள்ள ஒரு செயற்கையான ஏரி ஆகும். இது கடைசியில்1999 ஆம் ஆண்டு நீர் நிரம்பிக் காணப்பட்டது. அதன்பின்னர் 2000 ஆம் ஆண்டில் இருந்து நீரின்றி வறண்டது. .[1] இது ஜெய்ப்பூரிலிருந்து 32 கி.மீ. (20 மைல்) தொலைவில் 15.5 சதுர கிலோமீட்டர் (6.0 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரி 1876 இல் இராம் சிங் மகாராசாவால் இராம்காரில் வாழும் மக்கலுக்காகக் கட்டப்பட்டது.[2] முன்னொரு காலத்தில் இது ஜெய்ப்பூர் நகருக்கு நீர் வழங்கும் முதன்மையான வளமாக இருந்தது. குறிப்பாக, மழைக்காலத்திற்குப் பிறகு இது ஒரு பெயர்பெற்ற சுற்றுலா மையமாக அமைகிறது.

இராம்கார் ஏரி
Ramgarh Lake
இந்தியாவில் ஏரியின் இருப்பிடம்.
இந்தியாவில் ஏரியின் இருப்பிடம்.
இராம்கார் ஏரி
Ramgarh Lake
அமைவிடம்இராசத்தான், இந்தியா
ஆள்கூறுகள்27°02′52″N 76°03′20″E / 27.0477°N 76.0556°E / 27.0477; 76.0556
வகைசெயற்கை ஏரி
மேற்பரப்பளவு15.5 சதுர கிலோமீட்டர்கள் (6.0 sq mi)
இராம்கார் ஏரி, ஜெய்ப்பூர் மாவட்டம், இந்தியா, 2014.
செய்ப்பூர்

வரலாறு

தொகு

1982 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்போது ராம்கர் ஏரி மீது ஊர்வலம் நடைபெற்றது. வட்டார மக்கள் அரசின் கவனக் குறைவால் இந்த நீர்நிலை வறண்டுவிட்டதாகக் கருதுகின்றனர்.[3] . 2011 ஆம் ஆண்டு இராசத்தான் உயர் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியரை அணுகி, நீர்ப்பாசன பகுதிக்கு சென்று ஏரியின் நீர்பிடிப்புப் பகுதியில் நீர் வராமல் தடுக்கும் கையகப்படுத்தல்களை நீக்குமாறு கட்டளையிட்டது. இருப்பினும் அணையின் நீர்பிடிப்புப் பகுதியிலுள்ள அத்துமீறல் இன்னும் நிலுவையில் உள்ளது. மேலும் நீர் மறுசீரமைக்கப்படும் என்ற சிறிய நம்பிக்கை கூட அப்பகுதி வாழ் மக்களிடையே நிலவவில்லை.[4]

இராம்கார் கான்விலங்கு காப்பிடம்

தொகு

ஏரி அருகிலுள்ள பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளில் சிங்கங்கள், சிட்டல், நீல்கைய் உட்பட பலவகை விலங்குகள் வாழ்கின்றன. மேலும் இது 1982 ஆம் ஆண்டில் இந்திய அரசால் ஒரு கான்விலங்கு காப்பிடமாக அறிவிக்கப்பட்டது. அங்கு ஜம்வா மாடா என்ற கோவிலும் ஒரு பழைய கோட்டை இடிந்த நிலையில் அழியும் தருவாயிலும் உள்ளது. .[5] இந்தக் காப்பிடம் கத்தியார்-கிர் உலர் இலையுதிர்காட்டுச் சூழல்வட்டாரம் சார்ந்த ஒரு பகுதியாகும்.[6]

இராம்கார் அணை நீர்பிடிப்புப் பகுதி

தொகு

ஏரியின் நீர்பிடிப்புப் பகுதியில் பல ஊர்கள் உள்ளன. இவற்றில் சந்தவாசு, அமேர், மம்தோரி கலா, சங்கவலா பிசன்புரா ஆகியன அடங்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Sebastian, Sunny (2000-01-05). "Jaipur Lake a scorched bed now". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2014-08-26 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140826060649/http://www.thehindu.com/thehindu/2000/05/01/stories/0401221j.htm. பார்த்த நாள்: 26 August 2014. 
  2. "History of Jaipur". urban.rajasthan.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-13.
  3. Singh, Ajay (2012-08-24). ""Damned" Ramgarh still dry". Times of India. http://timesofindia.indiatimes.com/city/jaipur/Damned-ramgarh-still-dry/articleshow/15626741.cms. பார்த்த நாள்: 26 August 2014. 
  4. http://www.jaipur.org.uk/excursions/ramgarh-lake.html
  5. "Ramgarh Lake". jaipur.org.uk. பார்க்கப்பட்ட நாள் 6 January 2013.
  6. "Khathiar-Gir dry deciduous forests". Terrestrial Ecoregions. World Wildlife Fund. பார்க்கப்பட்ட நாள் 2017-01-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்கார்_ஏரி&oldid=3742006" இலிருந்து மீள்விக்கப்பட்டது