ராய் மாக்சம்

எழுத்தாளர்

ராய் மாக்சம்(Roy Moxham) என்பவர் பிரித்தானிய எழுத்தாளர், வரலாற்றாசிரியர் ஆவார். இவர் இங்கிலாந்தில் ஈவ்கம்  என்ற ஊரில் பிறந்தார். இலண்டனில் வாழ்ந்து வரும் ராய் மாக்சம் தென்னாசியா, தென் கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தும் நூல்கள் எழுதியும் வருகிறார்.

எழுதிய நூல்கள் தொகு

ஐரோப்பிய நாடுகள் வணிக நோக்கத்துக்காக இந்தியாவிற்கு வந்து குடியேற்றம் செய்து தொழில்கள் மீது கட்டுப்பாடுகள் விதித்து ஆதிக்கம் செலுத்திய வரலாற்றைத் 'தி தெப்ட் ஆப் இந்தியா' என்ற நூலில் எழுதினார்.[1]

இந்தியாவைத் துண்டாக்கவும் பிளவுபடுத்தவும் ஆங்கிலேயர் ஏற்படுத்திய உப்பு வேலி பற்றி  'தி கிரேட் ஹெட்ஜ் ஆப் இந்தியா' (தமிழில் உப்பு வேலி) என்ற நூலில் எழுதினார்.

பூலான் தேவி என்ற கொள்ளைக்காரி பற்றியும், தேயிலை வரலாறு பற்றியும் ராய் மாக்சம் நூல்கள் எழுதியுள்ளார். பிரீலாண்டர் என்பது இவர் எழுதிய முதல் நூல் ஆகும்.

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராய்_மாக்சம்&oldid=2716211" இலிருந்து மீள்விக்கப்பட்டது