ராவத்பாட்டா
ராவத்பாட்டா இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் சிட்டோகார் (Chittorgarh) மாவட்டத்தின் ஒரு நகராட்சியாகும். கோட்டாவில் இருந்து இந்நகரம் சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலிலுள்ளது. ராவத்பாட்டாவில் இருந்து கோட்டா வழியாக இந்தியாவில் பல இடங்களுக்குச் செல்லலாம்.
புவியியல்
தொகுஇதன் அமைவிடம் at 24°56′N 75°35′E / 24.93°N 75.58°E.[1] சராசரி உயரம் 325 மீட்டர் (1066 அடி)
மக்கள் தொகை:34,677, இதில் ஆண்கள் 53%, பெண்கள் 47%.சராசரி படித்தவர்கள் விகிதம்:73%[2]
1970 ஆம் ஆண்டுகளில் இருந்து இந்திய அணு மின் கழகம் இங்கு அணு உலைகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் உலைகளை செயல்படுத்தி வருகிறது. அணு மின் நிலையத்தின் மன்றம் ஒன்று இங்கே பள்ளிக்கூடங்களை நடத்தி வருகின்றனர். இந்திய அணு மின் கழகம் இங்கு ஒரு மருத்துவமனையையும் செயல்படுத்தி வருகிறது. இங்குள்ள அணு மின் நிலையங்களின் செயல்பாட்டைப் பார்க்கவும் மக்கள் வருகிறார்கள்.
சுற்றுலாத் தலங்கள்
தொகுஇங்கு அருகாமையில் உள்ள சுற்றுலாத்தலங்கள்:
ராணாப் பிரதாப் சாகர் அணைக்கட்டு:
ராணா பிரதாப் சாகர் அணைக்கட்டு (Rana Pratap Sagar Dam) சம்பல் ஆற்றின் குறுக்கே கட்டிய அணையாகும். நீர் மின் நிலையமும் இங்கு செயல்படுகிறது. அருகிலுள்ள விக்ரம் நகரில் உள்ள ஒரு சிறு குன்றில் ராணா பிரதாப் சிங்கின் உருவச்சிலை வைக்கப்பெற்றுள்ளது.
ஒன்பதாம் நூற்றாண்டில் அருகிலுள்ள பரோலி கிராமத்தில் கட்டிய பரோலி கோயில் வளாகம் (Baroli Temple complex) புகழ் பெற்றதாகும்.
சம்பல் ஆறும் பாமினி ஆறும் சேரும் இடத்தில் பைன்ஸ்ரோத் கர் கோட்டையை (Bhainsroad Garh Fort) பார்க்கவும் பயணிகள் வருகிறார்கள்.
அருகில் உள்ள பராஜர் நீர்வீழ்ச்சித்தலத்தையும் (Parajhar Waterfalls) பார்க்க பயணிகள் வருவதுண்டு. நீர்வீழ்ச்சி காரணமாகப் பாறைகள் இயற்கையாகவே சிற்பங்கள் போலக் காண்பதை இங்கு நாம் பார்க்கலாம். அருகாமையில் இறைவன் பரமசிவனை வழிபடும் ஒரு குகைக் கோயிலும் உள்ளது. மகா சிவராத்திரி அன்று மக்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வந்து வழிபடுகிறார்கள்.
அருகாமையில் அமைந்த சேடில் அணைக்கட்டைப் (Saddle Dam) பார்ப்பதற்கும் இங்கு பயணிகள் வருவதுண்டு.
அராவல்லிப் பள்ளத்தாக்கு மிகவும் இயற்கையின் எழில் கொஞ்சும் இடமாகும். இதன் நடுவில் அமைந்துள்ள நீம் கேரா வயல்களும் (Neem Khera Farms) மிகவும் அழகாக அமைந்ததாகும்.
மழைக்காலத்தில் அருகில் உள்ள கேபார்நாத் என்ற இடத்தில் நீர் வீழ்ச்சியும், அருகாமையில் அமைந்த கோயிலும் (Geparnath falls and Temple) மக்களைக் கவரும் இடங்களாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ ^ Falling Rain Genomics, Inc - Rawatbhata
- ↑ ^ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"