ரிசார்ட்ஸ் வேல்டு மணிலா தாக்குதல், 2017

2017, ஜூன் 2 ஆம் தியதி பிலிப்பைன்ஸ் நாட்டின் பேசி நகரில் அமைந்துள்ள ரிசார்ட்ஸ் வேல்டு மணிலா கட்டிடத்தில் தாக்குத்ல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் துப்பாக்கிச் சூடு மற்றும் தீக்கிரையாக்கல் ஆகிய சம்பவங்கள் நடைபெற்றன.[2] இதில் 36 பேர் கொல்லப்பட்டனர்.[3] ஊடகங்கள் இது தீவிரவாதச் செயலாக இருக்கலாம் எனச் செய்திவெளியிட்ட போதும் பிலிப்பைன்ஸ் தேசிய காவல் துறை இது கொள்ளை முயற்சி எனத் தெரிவித்தது.[4]

ரிசார்ட்ஸ் வேல்டு மணிலா தாக்குதல், 2017
நவம்பர் 2012 ல் ரிசார்ட்ஸ் வேல்டு மணிலா.
இடம்ரிசார்ட்ஸ் வேல்டு மணிலா கட்டிடம், பேசி, பிலிப்பீன்சு
நாள்2 ஜூன் 2017
தாக்குதலுக்கு
உள்ளானோர்
ரிசார்ட்ஸ் வேல்டு மணிலா
தாக்குதல்
வகை
துப்பாக்கிச்சூடு, தீக்கிரையாக்குதல்
இறப்பு(கள்)36 தாக்குதலாளி உட்பட [1]
நோக்கம்சந்தேகப்படும்படியான கொள்ளை

தாக்குதல்

தொகு

ஜூன் 2, 2017 நள்ளிரவிற்குப் பின்னர் ரிசார்ட்ஸ் வேல்டு மணிலா கட்டிடத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் இசுலாமிய அரசு அமைப்பின் தாக்குதலாக இருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது.[5] சூதாட்ட மையம் மற்றும் தங்கும் விடுதி அமைந்துள்ள இரண்டாவது மாடியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 54 பேர் காயமடைந்தனர். இதில் பாதுகாப்பு பணியாளரும் ஒருவர். அவர் தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டதால் காயமடைந்தார்.[6] சூதாட்ட மேசையில் எரிபொருளை ஊற்றி தாக்குதல்தாரி தீவைத்ததால் ஏற்பட்ட புகையினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.[7] தாக்குதலாளி கொள்ளையடிக்கும் நோக்கிலேயே இத்தாக்குதலை நடத்தியுள்ளார். தாக்குதலாளியின் கைப்பயிலிருந்து 23 இலட்சம் அமெரிக்க டாலர்கள் (11.3 கோடி பிலிப்பன்ஸ் பெசோ) மதிப்புடைய சூதாட்ட வில்லைகள் (Gaming chips) கைப்பற்றப்பட்டன. தாக்குதலில் தாக்குதல்தாரி கொல்லப்பட்டார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "At least 36 dead after robbery at Manila casino". Sky News. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2017.
  2. "Shooting heard at Manila leisure complex". bbc.com. BBC. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.
  3. At least 36 dead after robbery at Manila casino
  4. "Dela Rosa: Gunman in Resorts World attack killed". ABS-CBN news. 1 June 2017 இம் மூலத்தில் இருந்து 20 நவம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181120034642/https://news.abs-cbn.com/news/06/01/17/dela-rosa-gunman-in-resorts-world-attack-killed. பார்த்த நாள்: 1 June 2017. 
  5. Goldman, Russel (1 June 2017). "Shooting and Explosions Erupt at Casino Resort in Manila". New York Times. https://www.nytimes.com/2017/06/01/world/asia/shooting-resorts-world-manila.html. பார்த்த நாள்: 1 June 2017. 
  6. "Gunman sparks panic at Philippines resort, injuring 54". BNO News. June 1, 2017 இம் மூலத்தில் இருந்து ஜூன் 1, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170601211524/http://bnonews.com/news/index.php/news/id5965. 
  7. Rafales, April (1 June 2017). "Gunfire reported at Resorts World Manila". ABS-CBN இம் மூலத்தில் இருந்து 1 ஜூன் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170601204857/http://news.abs-cbn.com/news/06/01/17/gunmen-storm-resorts-world-manila. பார்த்த நாள்: 1 June 2017. 
  8. "Gunman kills himself after suspected robbery in Philippines casino: police". Reuters. 1 June 2017. https://www.reuters.com/article/us-philippines-resort-idUSKBN18S63W.