ரிசுபானா ஆறு

ரிசுபானா ஆறு (Rispana River)(ரிசுபனா ராவ்) என்பது இந்தியாவின் உத்தரகாண்டில் உள்ள மத்திய டேராடூனில் ஓடுகின்ற சாங் ஆற்றின் ஆறாகும். இது ராஜ்பூர் கிராமத்திற்கு அருகிலுள்ள முசோரி மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய நீரூற்றிலிருந்து தோன்றுகிறது.[1] தற்போது, நகரின் பல கழிவுநீர் கால்வாய்கள் இந்த ஆற்றில் கலப்பதாலும், பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும் ரிசுபான ஆறு, மாசுபட்டுள்ளது.[2][3] 2018ஆம் ஆண்டில், பிந்தால் ஆற்றுடன் சேர்ந்து ரிசுபானா ஆற்றினைப் புதுப்பிக்கத் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது.[3][4]

மேற்கோள்கள் தொகு

  1. Negi, Sharad Singh (July 24, 1991). Himalayan Rivers, Lakes, and Glaciers. Indus Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788185182612. https://books.google.com/books?id=5YtUShKY8zcC&pg=PA117. 
  2. Siddiqui, Nihal Anwar; Tauseef, S. M.; Dobhal, Rajendra (February 18, 2020). Advances in Water Pollution Monitoring and Control: Select Proceedings from HSFEA 2018. Springer Nature. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789813299566. https://books.google.com/books?id=enfRDwAAQBAJ&pg=PA155. 
  3. 3.0 3.1 "Rispana: For revival, Rispana river divided into 15 sector | Dehradun News - Times of India". The Times of India.
  4. "Rawat launches mission to revive Doon's Rispana river". Hindustan Times. May 19, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிசுபானா_ஆறு&oldid=3793546" இலிருந்து மீள்விக்கப்பட்டது