ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை

ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை (RNA induced silencing complex, RISC) என்பது சிறு ஆர்.என்.ஏ அல்லது குறு ஆர்.என்.ஏ (siRNA or miRNA) பிணைந்த பல புரதங்களின் ஒரு தொகுப்பு ஆகும். அர்கொனாட் (Argonaute) என்னும் ஒரு வகை புரதங்கள் இக்கலவையில் இணைந்து, சிறு அல்லது குறு ஆர்.என்.ஏ ஈரிழைகளை, ஓரிழையாக பிரிக்கின்றன. மேலும் பிரிக்கப்பட்ட ஓரிழை சிறு அல்லது குறு ஆர்.என்.ஏ க்களை, அதற்கான இலக்கு செய்தி ஆர்.என்.ஏ (messenger RNA) இணைய ஒரு வழிகாட்டியாக செயல்படுகின்றன. இவ்வாறு இணையபட்ட சிறு ஆர்.என்.ஏ , செய்தி ஆர்.என்.ஏ களை மரபணு வெளிபடுதலை முழுமையாக அழிகின்றன.

RISC உருவாவதை விளக்கும் படம்

குறு ஆர்.என்.ஏ க்களோ செய்தி ஆர்.என்.ஏ களை மரபணு வெளிபடுதலை முழுமையகாவோ அல்லது குறிபிட்ட மரபணுவின் புரத உற்பத்தியெய் தடுக்கின்றன.பின்னாளில் ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவையில் மற்றொரு புரதமான (Fragmentation retardation protein) இணைக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டது.

அண்மையில் குறு ஆர்.என்.ஏ கள் மரபணு வெளிபடுதலை தடுக்கின்றன என்பதற்கு மாறாக (miR-373), அவைகள் தொடரிகளோடு (Promoter) இணைந்து ஒரு மரபணு வெளிபடுதலை ஊக்குவிக்கும் என்பதை அறிந்துள்ளார்கள். இவ்விடத்தில் ஒடுக்கும் கலவை என்பதற்கு பதிலாக ஊக்குவிக்கும் கலவை ஒன்று இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

மேலும் சில குறு ஆர்.என்.ஏ கள் (miR-320) தொடரிகளோடு மற்ற புரதங்களோடு இணைந்து, தொடரியில் மாற்றங்களை (methylation) கொண்டு வருவதாலும் மரபணு வெளிபடுதலை மட்டுப்படுத்தும். இந் நிகழ்வை எபிமரபியல் மாற்றம் (epigenetic modiifcation) எனப் பெயர்.

இவற்றையும் பார்க்க:

தொகு

http://en.wikipedia.org/wiki/RNA-induced_silencing_complex

protein are majar source of buiding blockers it will give energy to living cells through translation


மேற்கோள்கள்

தொகு

Zamore P, Tuschl T, Sharp P, Bartel D (2000). "RNAi: double-stranded RNA directs the ATP-dependent cleavage of mRNA at 21 to 23 nucleotide intervals". Cell 101 (1): 25–33. doi:10.1016/S0092-8674(00)80620-0. PubMed.

Vermeulen A, Behlen L, Reynolds A, Wolfson A, Marshall W, Karpilow J, Khvorova A (2005). "The contributions of dsRNA structure to dicer specificity and efficiency". RNA 11 (5): 674–82. doi:10.1261/rna.7272305. PubMed.

Preall JB, He Z, Gorra JM, Sontheimer EJ. (2006). "Short Interfering RNA Strand Selection Is Independent of dsRNA Processing Polarity during RNAi in Drosophila." Curr Biol 16(5):530-5.

Siomi H, Siomi MC (22 January 2009). "On the road to reading the RNA-interference code". Nature 457 (7228): 396–404. doi:10.1038/nature07754. PubMed.

Gregory RI, Chendrimada TP, Cooch N, Shiekhattar R. (2005). Human RISC couples microRNA biogenesis and posttranscriptional gene silencing. Cell 123(4):631-40.

Sen GL, Wehrman TS, Blau HM. (2005). mRNA translation is not a prerequisite for small interfering RNA-mediated mRNA cleavage. Differentiation 73(6):287-93.

Saumet A, Lecellier CH (2006). "Anti-viral RNA silencing: do we look like plants?". Retrovirology 3 (3): 3. doi:10.1186/1742-4690-3-3. PubMed. http://www.retrovirology.com/content/3/1/3.

Robert F. Place, Long-Cheng Li, Deepa Pookot, Emily J. Noonan, and Rajvir Dahiya. (2008). MicroRNA-373 induces expression of genes with complementary promoter sequences. PNAS. 105, 5, 1608-1613.

Daniel H. Kim, Pål Sætrom, Ola Snøve, and John J. Rossi. (2008). MicroRNA-directed transcriptional gene silencing in mammalian cells. PNAS.105, 42, 16230–16235,