ரீஸ் (கவிதை)
ட்ரீஸ் (கவிதை) எனும் நூலானது ஜாய்ஸ் கில்மர் எனும் அமெரிக்க கவிஞரால் இயற்றப்பட்ட மொழி நடைக் கவிதை நூலாகும். 1913 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எழுதப்பட்ட இந்தக் கவிதை ஆகத்து மாதம் "கவிதை" (Poetry) எனும் உரைநடைக் கவிதைகளின் தொகுப்பான மாத இதழில் வெளியானது. 1914 ஆம் ஆண்டில் கில்மரின் மற்ற கவிதை தொகுப்புகளோடு சேர்க்கப்பட்டது [1][2][3] இந்த வரிகளில் இயற்கையின் அழகை அப்படியே நகல் எடுக்க முடியாத மனிதனின் இயலாமையை கில்மர் தன் மனதில் உணர்ந்து அதைக் கவிதையாக வெளிப்படுத்தி உள்ளார். கில்மர் 'ட்ரீஸ்' கவிதையில் மனிதர்களின் இயலாமையை நக்கல் நையாண்டியாக எடுத்து உரைத்தமைக்காகவும், அப்பொழுது உள்ள பிரசித்தி பெற்ற கலாசாரத்தை ஒட்டி கவிதை எழுதியமைக்காகவும் அடிக்கடி நினைவு கூறப்படுகிறார். இவரின் இந்த கவிதை அநேக வேளைகளில் விமர்சகர்களால் மிகவும் இலேசான நடை என்றும் அறிஞர்களால் மிக எளிய நடை மற்றும் மிக உணர்ச்சி பூர்வமான எழுத்து என்றும் இவரின் எழுத்து மிகவும் மரபு சார்ந்து பழைய முறைப்படி எழுதப்பட்டதாகவும் விமர்சிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.[4] ஆனால் இவற்றிற்கு மேலாக 'ட்ரீஸ்' கவிதை அநேகரின் ஆதரவு பெற்றதால் அழியாமல் நிலைத்து இருக்கிறது. கை டெவன்பொர்ட் (Guy Devanport) எனும் இலக்கிய விமர்சகர் இக்கவிதையை “ஒவ்வொருவரும் மனதால் அறிந்த ஒரு கவிதை” என்று வர்ணிக்கிறார். " ட்ரீஸ்” அடிக்கடி பல கவிதைத் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளது.[5] மேலும் இதற்கு இசையும் அநேக வேளைகளில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் பிரபலமான இசை ஆஸ்கர் ராஸ்பக் என்பவரால் இயற்றப்பட்டு நெல்சன் எட்டி, இராபர்ட் மெர்ரில் மற்றும் பால் ராப்சன் எனும் பாடகர்களால் பாடப்பட்டது. கில்மரின் வாழ்வில் தொடர்புடைய பல இடங்கள் மற்றும் கல்வி அமைப்புகளில் காணப்படும் பல மரங்கள் கவிதையில் எழுத கில்மருக்கு தூண்டுகோலாய் இருந்த குறிப்பிட்ட மரமாக அடையாளம் காணப்பட்டு உரிமை கொண்டாடப்பட்டது. இவற்றுள் ருட்கெர்ஸ் பல்கலைக்கழகம், நாட்ரே டேம் பல்கலைக்கழகம் மற்றும் நாடு முழுவதும் இவர் சென்று கண்ட நகரங்களும் அடங்கும். ஆனாலும் கில்மரின் மூத்த மகன் கெண்டோன் என்பார் அந்தக் கவிதை அப்படி எந்த குறிப்பிட்ட மரத்தையும் குறிப்பிடவில்லை என்று அறிவித்துள்ளார். மேலும் அது எந்த மரத்தையும் குறிப்பிடலாம் என்றும் கூறியுள்ளார். “ட்ரீஸ்” கவிதையானது நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள ’மாவா’ எனும் இடத்தில் உள்ள அவர்களின் குடும்ப வீட்டில் மேலறையில் இருந்து எழுதப் பட்டது. இந்த அறையானது "மலையின் கீழ் பாகத்தை நோக்கியும் நன்கு மரங்களால் அமந்துள்ள எங்களின் வீட்டின் முன்பக்கத்தையும் நோக்கி இருக்கும்” என்று கில்மர் கூறுகிறார்.[6][7] மேலும் கெண்டன் கில்மர் கூறுகிறார் “ என் தந்தையின் மரங்களைக் குறித்த அன்பு அனைவரும் அறிந்ததே ஆனால் அவரின் அன்பு ஒருபோதும் உணர்ச்சிகளால் ஆனது அல்ல" – இவரின் வீட்டின் வித்தியாசமான அனைவரும் அடையாளம் கூறும் வகையில் உள்ள அமைப்பு வீட்டின் முன் உள்ள மிகப்பெரிய மரக்கட்டைகளின் குவியல் ஆகும்.
இவரின் எழுத்து
தொகுமாவா
தொகுகில்மரின் மூத்த மகன் கென்டன் அவர்கள் கூற்றுப் படி "மரங்கள்" எழுதப்பட்டது பெப்ருவரி 1913 ஆம் வருடம் ஆகும்.[6][7] கில்மரின் குடும்பம் தென்மேற்கு பகுதியில் உள்ள ஏர்மவுண்ட் ரோடும் ஆர்மர் ரோடும் ஒன்றையொன்று குறுக்கிட்டுச் சந்திக்கும் இடத்தில் உள்ள மாவா எனும் பகுதியில் இருந்த ஒரு வீட்டில் ஐந்து வருடங்கள் இருந்தனர் அந்த வீடு ரம்போ பள்ளத்தாக்கை நோக்கி இருந்தது.[8]
இந்தக் கவிதையானது மற்ற எழுத்துக்களிடையே கிடைத்த இடைவெளியில் மத்தியான நேரத்தில் எழுதப் பட்டது. இக்கவிதை எழுதப்பட்ட மேசையானது மேல் அறையில் மரங்கள் அடர்ந்த மலையை நோக்கி இருக்கும் சன்னலுக்கு அருகில் இருந்தது. இது ஒரு சிறிய குறிப்பேட்டில் எழுதப்பட்டு இருந்தது அந்த குறிப்பேட்டில் அவரது தகப்பனாரும் தாயாரும் எழுதிய பல கவிதைகளும் கவிதை இயற்றப்பட்ட நாளும் இருந்தது. இந்தக் குறிப்பேட்டின் ஒரு பக்கத்தில் ‘ட்ரீஸ்’ கவிதையின் முதல் இரு வரிகளும் எழுதப்பட்ட தேதியான பெப்ருவரி 2, 1913 காணப்படுகின்றன, குறிப்பேட்டின் சில பக்கங்களுக்குப் பிறகு மற்றொரு பக்கத்தில் கவிதையின் அனைத்து வரிகளும் காணப்படுகின்றன. இந்த கவிதையானது குடும்பத்தில் அனைவருக்கும் பிரியமான அவரின் மனைவியின் தாயார் திருமதி. ஹென்றி மில்ஸ் அல்டன் அம்மையாருக்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது
2013 இல் கில்மரின் மகனால் மறைபொருளாக குறிக்கப்பட்ட குறிப்பேடானது பத்திரிகையாளரும் கில்மரின் எழுத்துக்களை ஆராய்ச்சி செய்பவரும் ஆகிய அலெக்ஸ் மிச்செலினி என்பவரால் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் லாயின்கர் நூலகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்திற்கு கில்மரின் பேத்தி நன்கொடையாக கொடுத்த குடும்ப எழுத்துத் தொகுப்பில் இருந்து அலெக்ஸ் மிச்செலினி இதைக் கண்டுபிடித்தார்.[8][9] கவிதை சமர்ப்பிக்கப் பட்ட”திருமதி. ஹென்றி மில்ஸ் அல்டன்” கில்மரின் மனைவி அலைன் முர்ரே கில்மரின் (1888 – 1941) தாயார் ஆடா ஃபாஸ்டர் முர்ரே அல்டன் (1866 – 1936) ஆவார். இவர் ஒரு எழுத்தாளர் இவர் ஹார்பர்’ஸ் மகஸின் (மாத பத்திரிகை) பதிப்பாசிரியர் ஹென்றி மில்ஸ் அல்டனை மணந்தார்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ Letter from Kenton Kilmer to Dorothy Colson in Grotto Sources file, Dorothy Corson Collection, University of Notre Dame (South Bend, Indiana).
- ↑ Kilmer, Joyce. "Trees". பன்னிரெண்டு வரிகள் கொண்ட இக்கவிதை அடு்த்த அடு்த்த வரிகளில் இணை இயைபொலி தொகுப்பு கொண்டதாகவும். ஒவ்வொரு வரியிலும் நான்கு அடி கொண்ட ஈரசைச்சீரின் அடிப்படையில் அமைந்ததாகவும் உள்ளது.(Chicago: Modern Poetry Association, August 1913), 2:160.
- ↑ Kilmer, Joyce. Trees and Other Poems. (New York: Doubleday Doran and Co., 1914), 18.
- ↑ Hart, James A. Joyce Kilmer 1886–1918 (Biography) at Poetry Magazine. (Retrieved 15 August 2012).
- ↑ Hampson, Rick. "Shift in education priorities could topple poem 'Trees'" in USA Today' (6 May 2013). Retrieved 22 May 2013.
- ↑ 6.0 6.1 Kilmer, Miriam A. Joyce Kilmer (1886–1918) - Author of Trees and Other Poems (website of family member). Retrieved 22 May 2013
- ↑ 7.0 7.1 Kilmer, Kenton. Memories of My Father, Joyce Kilmer (New Brunswick: Joyce Kilmer Centennial Commission, 1993), 89.
- ↑ 8.0 8.1 Pries, Allison. "Letter backs Mahwah's claim on Joyce Kilmer poem 'Trees'" in The Record (10 May 2013). Retrieved 22 May 2013.
- ↑ McGlone, Peggy. "Mystery solved: Joyce Kilmer's famous 'Trees' penned in N.J." in The Star-Ledger (10 May 2013). Retrieved 22 May 2013.
- ↑ "In and Around the Village" in Metuchen Recorder (24 February 1900).