ருச்சி பதோலா
ருச்சி பதோலா (Ruchi Badola) இந்தியாவில் பிறந்த பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் இந்திய காட்டுயிர் நிறுவனத்தின் சூழலியல் திட்டமிடல் மற்றும் பங்கேற்பு மேம்பாட்டு பிரிவில் இவர் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிகிறார்.[1] இவர் சமூக அடிப்படையிலான பாதுகாப்பு , நிலையான பல்லுயிர்ப்பெருக்கம், நிலையான சுற்றுச் சூழல் சேவைகள் போன்றவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.[2][3]
கல்வி
தொகுஇவர் கர்வால் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின் 1988 ஆம் ஆண்டில் இந்திய காட்டுயிர் கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்து பி. எச். டி பட்டம் பெற்றார்.[1]
ஆராய்ச்சியில் இவரின் பங்கு
தொகுஇவர் பிரவாசி கங்கா பிரஹாரி எனும் திட்ட்டத்தினைத் துவக்கினார்[4][5]. இந்த திட்டத்தின் மூலம் இந்தியக் குடியுரிமை பெற்றவ உலகில் உள்ள இந்தியர்கள் கிளீன் கங்கா விஷன் திட்டத்தின்கீழ் கங்கை ஆற்றினை சுத்தம் செய்தல் மற்றும் மறுஆக்கம் செய்தல் போன்ற பணிகளில் பங்கேற்றுக்கொள்ள வழிவகை செய்தது.[6][7]
நூல்கள்
தொகுஇவர் பல ஆய்விதழ்கள் மற்றும் ஏழு நூகளை எழுதியுள்ளார்.[8] இந்து குஷ் மலையின் பல்லுயிர்ப்பெருக்கத்தினை வலுவூட்டுதல் மற்றும் சூழலியல் சேவைகள் பற்றிய அத்தியாயங்களை எழுதியுள்ளார்.[9]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Faculty at Wildlife Institute of India". Wildlife Institute of India. Archived from the original on மே 7, 2019. பார்க்கப்பட்ட நாள் March 8, 2019.
- ↑ "Managing Tourism in Indian Protected Area" (PDF). Elsvier. பார்க்கப்பட்ட நாள் March 8, 2019.
- ↑ "Tourism in Corbett". Telegraph. பார்க்கப்பட்ட நாள் March 8, 2019.
- ↑ "pravasi ganga prahari programme". Wildlife Institute of India. பார்க்கப்பட்ட நாள் March 8, 2019.
- ↑ "pravasi ganga prahari programme". Press Reader. பார்க்கப்பட்ட நாள் March 8, 2019.
- ↑ "wii-holds-workshop-to-train-local-communities-in-protecting-ganga-aquatic-species". timesofindia. பார்க்கப்பட்ட நாள் March 8, 2019.
- ↑ "uttarakhand-woman-on-a-mission-to-protect-ganga-one-village-at-a-time". hindustantimes. பார்க்கப்பட்ட நாள் March 8, 2019.
- ↑ "researchgate". researchgate. பார்க்கப்பட்ட நாள் March 8, 2019.
- ↑ "Ecosystem Services in the Hindu Kush". springer. பார்க்கப்பட்ட நாள் March 8, 2019.