ருத்ராபூர் குண்டுவெடிப்புகள், 1991


ருத்ராபூர் குண்டுவெடிப்புகள், 1991 (1991 Rudrapur bombings) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் [1] மாநிலத்தில் இருக்கும் ருத்ராபூர் நகரில் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் குண்டுவீச்சுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட சம்பவத்தைக் குறிக்கிறது. 1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் நாளில் அங்கு இரண்டு குண்டுகள் வெடித்தன. முதல் குண்டு வெடித்தபோது மக்கள் பொது மைதானத்தில் இராம்லீலா என்ற நாடகம் பார்த்துக் கொண்டிருந்தனர். 15 நிமிடங்களுக்குப் பின்னர் இரண்டாவது குண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அருகில் வெடித்தது. முதல் குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இம்மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இக்குண்டு வெடிப்பு சம்பவத்தில் 40 பேர் கொல்லப்பட்டனர், 140 பேர் காயமடைந்தனர். காலிசுதான் தேசியப் படையினர் இச்சம்பவத்திற்கு பின்னர் பொறுப்பேற்றனர்[2][3]. 1991 ருத்ராபூர் குண்டுவெடிப்பு சம்பவம் குறிப்பாக கைவினை வெடி குண்டு தாக்குதல் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது[4].

ருத்ராபூர் குண்டுவெடிப்புகள், 1991
இடம்இந்தியா
நாள்அக்டோபர் 17, 1991
தாக்குதல்
வகை
இரட்டை குண்டுவெடிப்புகள்
இறப்பு(கள்)41
காயமடைந்தோர்140

மேற்கோள்கள் தொகு

  1. "Remembering major terror attacks on Anti Terrorism Day". India TV. பார்க்கப்பட்ட நாள் 2014-02-19.
  2. "Terrorists strike during Ram Lila celebrations in Uttar Pradesh". India Today. 1991-11-15. பார்க்கப்பட்ட நாள் 2014-02-19.
  3. "2 Bombs Kill 41 and Injure 140 in India". New York Times. 18 October 1991. http://www.nytimes.com/1991/10/18/world/2-bombs-kill-41-and-injure-140-in-india.html. 
  4. Krishna M. Mathur (1994). Police, Law and Internal Security. Gyan Books. p. 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-212-0455-2.