வகைகள்

தொகு

லகுவில் ஏற்படக்கூடிய ஐந்து வேறுபாடுகளினால், ரூபக தாளத்தில் ஐந்து வகைகள் உருவாகின்றன. இவை சாதிகள் எனப்படுகின்றன. இச்சாதிகள் அவற்றில் இடம்பெறும் லகுவின் பெயரை ஒட்டிப் பின்வருமாறு அழைக்கப்படுகின்றன:

  1. திஸ்ரசாதி ரூபக தாளம்
  2. சதுஸ்ரசாதி ரூபக தாளம்
  3. கண்டசாதி ரூபக தாளம்
  4. மிஸ்ரசாதி ரூபக தாளம்
  5. சங்கீர்ணசாதி ரூபக தாளம்

திஸ்ரசாதி ரூபக தாளம்

தொகு

இத்தாளம் சக்கரம் எனப்பெயர் பெறும். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்:

  • திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
  • திஸ்ர லகு (ஒரு தட்டு, இரண்டு விரல் எண்ணிக்கைகள்)

சதுஸ்ரசாதி ரூபக தாளம்

தொகு

இத்தாளத்துக்கு பதி என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்:

  • திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
  • சதுஸ்ர லகு (ஒரு தட்டு, மூன்று விரல் எண்ணிக்கைகள்)

பெரும்பாலான இடங்களில், ஆரு அலகுகள் கொண்ட சதுஸ்ரசாதி ரூபக தாளத்தையே ரூபக தாளம் என்று அழைக்கின்றனர்.

கண்டசாதி ரூபக தாளம்

தொகு

இது இராச எனப்படும். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்:

  • திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
  • கண்ட லகு (ஒரு தட்டு, நான்கு விரல் எண்ணிக்கைகள்)

மிஸ்ரசாதி ரூபக தாளம்

தொகு

இதற்கு குல என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்:

  • திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
  • மிஸ்ர லகு (ஒரு தட்டு, ஆறு விரல் எண்ணிக்கைகள்)

சங்கீர்ணசாதி ரூபக தாளம்

தொகு

இதற்கு பிந்து என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்:

  • திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
  • சங்கீர்ண லகு (ஒரு தட்டு, எட்டு விரல் எண்ணிக்கைகள்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபக_தாளம்&oldid=3386450" இலிருந்து மீள்விக்கப்பட்டது