ரூபஸ் தி ஹாக்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ரூபஸ் (Rufus The Hawk) என்பது இங்கிலாந்தில் நடைபெறும் உலகின் பழமையான டென்னிஸ் போட்டியான விம்பில்டன் போட்டிகளின் பொழுது புறாக்களை விரட்ட பயன்படுத்தப்படும் பாறின் பெயராகும். விம்பில்டன் போட்டிகள் மட்டுமே இன்றும் புல்தரைகளில் விளையாடப்படுகிறது. புல்தரைகளில் புறாக்கள் வந்து அமர்ந்தால் அவற்றை பயங்கொள்ளச் செய்து விரட்ட ரூபஸ் பயன்படுத்தப்படுகிறது.
ரூபஸ் | |
---|---|
Rufus the Hawk, Bird Scarer | |
இனம் | Harris Hawk |
பால் | ஆண் |
Occupation | பறவை பயங்காட்டி |
அறியப்படுவதற்கான காரணம் | விம்பிள்டன் போட்டியிலிருந்து பறவைகளை விரட்டியது |
ரூபஸ் பாறு இந்த வேலையே கடந்த பதினைந்து வருடங்களாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பருந்து 2012 ஒலிம்பிக் போட்டிகளின் பொழுதும் பறவைகளை விரட்ட பயன்படுத்தப்பட்டது. ருபுஸ் பாறுக்கு முகநூல் மற்றும் டுட்டர் தளத்தில் கணக்குகள் உள்ளன.
விம்பில்டன் போட்டி நிர்வாகத்தினர் ருபுஸுக்கு புகைப்படத்துடன் கூடிய பணியாளர் அட்டை வழங்கியுள்ளனர். அடையாள அட்டையில் ருபஸின் பணி பறவைகளை விரட்டுபவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[1]