ரூபேசு
ரூபேசு (Roopesh) என்பவர் பிரவீன் என்ற புனைப்பெயரால் எல்லாராலும் அறியப்பட்ட கேரள மாநிலத்தின் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்) கட்சியின் தலைவராவார். கேரள மாநிலத்தின் காவல்துறையால் அதிகம் தேடப்பட்ட மாவோயியம் கட்சியின் தலைவர் ரூபேசு ஆவார்.[1][2][3][4]
ரூபேசு | |
---|---|
பிறப்பு | பிரவீன் பெரிங்கோட்டுகுரா, திருச்சூர் மாவட்டம் |
தேசியம் | இந்தியன் |
அறியப்படுவது | மாவோயிய இயக்கம், இந்தியா |
சொந்த ஊர் | பெரிங்கோட்டுகுரா |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்) |
வாழ்க்கைத் துணை | சியானா |
பிள்ளைகள் | அமி மற்றும் சவீரா |
வாழ்க்கை
தொகுகேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் பெரிங்கோட்டுகுரா என்னும் ஊரில் பிறந்த ரூபேசு அங்கேயே வளர்க்கப்பட்டார்.
ரூபேசு சட்டத்தில் பட்டம் பெற்றவர் ஆவார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்-லெனினியம்), செங்கொடி, ஜனசக்தி. மக்கள் போர் பிரிவுகளின் மாணவர் அமைப்பில் பணிபுரிந்தார். கேரளாவில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) கேரளாவில் ஆரம்பிக்கப்பட்டபோது ரூபேசு இக் கட்சியின் தலைவரானார். வசந்தத்திலே பூமரங்கள் என்ற ரூபேசு எழுதிய நாவல் மற்றும் மாவோயிசுட்டு ஆகிய புத்தகங்களை இரண்டு பதிப்பகங்கள் வெளியிட்டன[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cops closing in on Maoist leader Roopesh". Times of India. பார்க்கப்பட்ட நாள் 2014-09-25.
- ↑ "Police, IB Probing Authenticity of Maoist Leader's Video Message". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2014-09-25.
- ↑ "Couple heading Maoist movement in Kerala". Rediff. பார்க்கப்பட்ட நாள் 2014-09-25.
- ↑ "We are here, claim Kerala Maoists". Times of India. பார்க்கப்பட்ட நாள் 2014-09-25.
- ↑ "Publishers Slug It Out Over Absconding Maoists Novel". Daily Pioneer. http://www.dailypioneer.com/nation/publishers-slug-it-out-over-absconding-maoists-novel.html. பார்த்த நாள்: 18 July 2015.
- ↑ "Flowers of spring that failed to bloom in Karala". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/kozhikode/Flowers-of-spring-that-failed-to-bloom-in-Karala/articleshow/22108784.cms. பார்த்த நாள்: 18 July 2015.