ரெஜ்ஜி குருவில்லா
ரெஜ்ஜி குருவில்லா (Rejji Kuruvilla) என்பவர் இந்திய-அமெரிக்க உயிரியலாளர் ஆவார். இவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பள்ளியில் உயிரியல் பேராசிரியராக உள்ளார்.
கல்வி
தொகுகுருவில்லா 1987-ல் கொல்கத்தாவில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் இளநிலை அறிவியல் கல்வியினை முடித்தார். 1998-ல் இவர் ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[1] இவரது ஆய்வுக் கட்டுரை "நீரிழிவு எலிகளில் நரம்பு மற்றும் மனித இசுக்வான் உயிரணுக்களில் அதிகரித்த குளுக்கோசில் வளர்க்கப்பட்ட அராச்சிடோனிக் அமிலம் குறைதல் பற்றிய ஆய்வுகள்" என்று தலைப்பிடப்பட்டது. இவரது முனைவர் பட்ட ஆலோசகர் ஜோசப் ஐச்பெர்க் ஆவார்.[2] குருவில்லா டேவிட் ஜின்டியின் ஆய்வகத்தில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பள்ளியில் நரம்பணுக்களில் நியூரோட்ரோபின் சமிக்கைகள் குறித்த ஆராய்ச்சியை முடித்துள்ளார்.[3]
பணி
தொகுகுருவில்லா ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பள்ளியில் உயிரியல் பேராசிரியராக உள்ளார்.[1] பரிவு நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளில் இவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வுகள் நரம்பு மண்டல பராமரிப்பில் நியூரோட்ரோபின்களின் உயிரணு உட்கடத்தலை ஆராய்கின்றன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Rejji Kuruvilla, Ph.D." www.hopkinsmedicine.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-30.
- ↑ Kuruvilla, Rejji (1998). Studies on arachidonic acid depletion in diabetic rat nerve and human Schwann cells cultured in elevated glucose. University of Houston.
- ↑ 3.0 3.1 Reporter (November 25, 2016). "Johns Hopkins Research Team Finds Nerve Growth Protein Controls Blood Sugar". India West (in ஆங்கிலம்). Archived from the original on 2019-01-31. பார்க்கப்பட்ட நாள் 2019-01-30.
வெளி இணைப்புகள்
தொகு- Rejji Kuruvilla publications indexed by Google Scholar