ரெட் கார்பெட் இன்
அமெரிக்கா மற்றும் பஹமாஸ் ஆகிய இடங்களில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் மோட்டல்களின் தொடராக ரெட் கார்பெட் இன் ஹோட்டல் (Red Carpet Inn) உள்ளது. ஹாஸ்பிடாலிட்டி இன்டர்நேஷனல் ஃப்ரான்சிஸ் சிஸ்டம் அமைப்பின் ஒரு பகுதியாகவும் ரெட் கார்பெட் இன் ஹோட்டல் விளங்குகிறது. டிரிப் அட்வைஸர் எனும் இணையதளத்தின் வாசகர் கருத்துக்களில் சராசரியான் விருப்பத்தினை ரெட் கார்பெட் இன் பெற்றுள்ளது.[1]
வரலாறு
தொகு1972 ஆம் ஆண்டு மே மாதம் டாமி டக்கர் மற்றும் பில் ஹார்வுட் ரெட் கார்பெட் இன் ஹோட்டலை அமெரிக்காவில் தொடங்கினர். இதில், டாமி டக்கர், குவாலிட்டி கோர்ட்ஸ் யுனைடெட்டின் நிறுவனர் ஆவார். பில் ஹார்வுட், பிராட்வே என்டர்பிரைஸஸின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராவார். 1972 ஆம் ஆண்டு மே மாதம் ரெட் கார்பெட் இன் அமெரிக்காவின் தலைமையகம் ஃப்ளோரிடாவின், டய்டோனா கடற்கரைக்கு மாற்றப்பட்டது.
1973 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ரெட் கார்பெட் இன், மாஸ்டர் ஹோஸ்ட்ஸ் இன் மற்றும் ரெட் கார்பெட் இன் ஆகியவற்றிற்கான பயண விவரங்கள் அடங்கிய புத்தகத்தினை வெளியிட்டது. அத்துடன் உடனடியாக முன்பதிவு செய்வதற்கான இலவச தொலைபேசி எண்ணையும் வெளியிட்டது. அந்த காலகட்டத்தில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஸ்பேஸ் பேங்க் எனும் பெயருடன் செயல்பட்ட அமைப்பு, உலகிலேயே மிகப்பெரிய அளவில் முன்பதிவு செய்யும் அமைப்பாக இருந்தது. இந்த அமைப்பின் உதவியுடன் விரைவாக முன்பதிவு செய்யும் வசதியினை ரெட் கார்பெட் இன் நிறுவனம் உலகம் முழுவதும் விரைவாக பரப்பியது. ஒவ்வொரு மாஸ்டர் ஹோஸ்ட்ஸ் இன் மற்றும் ரெட் கார்பெட் இன் ஹோட்டல்களிலும் அளிக்கப்படும் முழுச் சேவைகள், சாப்பாட்டு வசதிகள், உணவு மற்றும் குடிபானங்கள், அறைச் சேவைகள், துணி துவைக்கும் வசதி, உடை மற்றும் அலங்கார பொறுப்பாளர், பளு தூக்குபவர் போன்ற அனைத்து வசதிகளும் அடங்கிய பட்டியல், நீச்சல் குளம், ஒவ்வொரு அறையிலும் வைக்கப்பட்டிருந்த தொலைபேசி மூலம் அறைச்சேவையினை அழைக்கும் 24 மணிநேர வசதி, குளிரூட்டப்பட்ட அறை விவரங்கள், உயர்தர அறைகள் மற்றும் அனுபவமிக்க விருந்தோம்பல் குழுவினர் போன்ற அனைத்து விவரங்களும் அந்த விவரப்பட்டியல் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தன. ரெட் கார்பெட் இன் ஹோட்டலின் 57 இடங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தன, அவற்றுள் சில முக்கிய கவரக்கூடிய நகரங்களான டுக்ஸன், அரிசோனா; லிட்டில் ராக், ஃப்ளோரிடா; டென்வெர், கொலரோடா; டாய்டோனா கடற்கரை, ஜாக்சன்வில்லே மற்றும் ஓர்லான்டோ, ஃப்ளோரிடோ; அட்லாண்டா மற்றும் சாவன்னாஹ், ஜார்ஜியா; க்நோக்ஃஸ்வில்லே மற்றிம் பிஜியன் ஃபோர்ஜ், டென்னீஸ்ஸீ; ஹவுஸ்டன், டெக்ஸாஸ்; ரிஸ்மண்ட், ஸ்டௌன்டன், விர்ஜினியா கடற்கரை மற்றும் விலியம்ஸ்பெர்க், விர்ஜினியா போன்றவை இடம்பெற்றிருந்தன. 1978 ஆம் ஆண்டு காலகட்டத்தில், இதன் உரிமை மாற்றப்பட்டதால் ரெட் கார்பெட்டின் சர்வதேச தலைமையகம் ஜார்ஜியாவில் உள்ள, அட்லாண்டாவிற்கு மாற்றப்பட்டது. 1980 ஆம் ஆண்டு ரெட் கார்பெட் இன் இன்டர்நேஷனல் சர்வதேச பயணத்திற்கான விவரப் பட்டியலை வெளியிட்டது. அதில் ரெட் கார்பெட் இன் தொடர்பான 99 இடங்கள் மற்றும் வசதிகள் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் ஹோட்டல்கள் அமைந்துள்ள இடத்தினை அடைவதற்கான வழிகளுடன், 30 அமெரிக்க இடங்கள் உட்பட அவை அமைந்துள்ள இடங்கள் குறித்த விவரங்களும் அதில் இடம்பெற்றிருந்தன.[2]
இருப்பிடம்
தொகுநியூயார்க் நகரின், புரூக்லைனில் ரெட் கார்பெட் இன் அமைந்துள்ளது. இதனருகில் ஃபாரஸ்ட் பார்க் கோல்ஃப் கோர்ஸ், புரூக்லைன் குழந்தைகள் அருங்காட்சியகம் மற்றும் புரோவர் பூங்கா போன்றவை உள்ளன. இதற்கு அருகில் கண்டு ரசிக்கக்கூடிய இடங்களான ஜூவிஷ் குழந்தைகள் அருங்காட்சியகம் மற்றும் காட்டுப் பூங்கா ஆகியவை அமைந்துள்ளது.[3]
ஹோட்டலின் வசதிகள்
தொகுவாராந்தாவினைச் சார்ந்த பகுதியில் டீ/காஃபி பெறும் வசதி, உயர்தூக்கி வசதி, தொலைக்காட்சி வசதி போன்றவை உள்ளன. இவை தவிர பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதிகளில் குளிரூட்டப்பட அறை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. முன்னே இருக்கும் வரவேற்கும் அறை 24 மணிநேரமும் செயல்படும்படி அமைக்கப்பட்டுள்ளது.[4]
விருந்தினர் அறைகள்
தொகுகுளிரூட்டப்பட்ட வசதிகள் கொண்ட 50 விருந்தினர் அறைகள் ரெட் கார்பெட் இன் ஹோட்டலில் உள்ளன. அங்கு முடி உலரவைப்பான் மற்றும் கழிவக உபகரணங்களுடன் கூடிய கழிவக வசதிகள் உள்ளன. அத்துடன் இலவச தொலைபேசி வசதியும் அளிக்கப்படுகிறது (கட்டுப்பாடுகள் இருக்கலாம்). செயற்கைக்கோள் தொலைக்காட்சியும் அளிக்கப்படுகிறது. துணியினை தேய்த்து மடித்து வைத்தல், கடிகார வானொலி வசதி போன்ற வசதிகளும் இங்கு கூடுதலாக அளிக்கப்படுகின்றன. தினசரி அறை பராமரிப்பும் இங்கு செய்து தரப்படுகிறது.
அறைகள்
தொகுசாதாரண இரண்டு படுக்கை அறை
தொகுஇந்த விருந்தினர் அறையில் இரு படுக்கை மற்றும் வேலை செய்யும் சிறு இடம் இருக்கும். கம்பி வடம் உதவியுடன் தொலைக்காட்சியினை பார்க்கும் வசதியும், கம்பி வடமில்லா முறையில் இணையவசதி கிடைக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளது. கழிவக உபகரணங்கள் மற்றும் முடி உலரவைப்பானுடன் கூடிய கழிவறைகள் மற்றும் குளியலறைகள் உள்ளன. இந்த அறையில் துணியினை தேய்த்து மடித்து வைப்பதற்குத் தகுந்தாற்போன்ற உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
சாதாரண ராணி அறை
தொகுஇந்த அறையில் ஒரு படுக்கை மற்றும் வேலை செய்யும் இடம் இருக்கும். கம்பி வடம் உதவியுடன் தொலைக்காட்சியினை பார்க்கும் வசதியும், கம்பி வடமில்லா முறையில் இணையவசதி கிடைக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளது. கழிவக உபகரணங்கள் மற்றும் முடி உலரவைப்பானுடன் கூடிய கழிவறைகள் மற்றும் குளியலறைகள் உள்ளன. இந்த அறையில் துணியினை தேய்த்து மடித்து வைப்பதற்குத் தகுந்தாற்போன்ற உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
குறிப்புகள்
தொகு- ↑ Hospitality Internatnional archives, 1972 and 1973 Master Hosts Inns and Red Carpet Inns Internatnional Lodging Directory, Colorado Department of State, Business tab, The Motel in America, Author(s) Jake A. Jakle, Keith A. Sculle, Jefferson S. Rogers,and the corporate website and consumer website for Red Carpet Inn.
- ↑ "Red Carpet Inn New York City". Cleartrip.
- ↑ "Red Carpet Inn". Hospitality International. Archived from the original on 2016-02-17.
- ↑ "Red Carpet Inn & Suites". Meeting and Conversation.